எதிர்வினைகள் (2)

 


பின்வரும் கருத்துக்கள் நம் வாசகர் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டவை:

மதிப்புமிகு சாரு,

உங்களுடைய இந்தக் கடிதத்தையும், தாங்கள் தற்போது எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும், உடனடியாகப் பார்த்தேன். இந்தச் சந்திப்பிற்கு முன், தாங்கள் கமலிடம் கொண்டுள்ள அன்பை நான் நேரில் கேட்டறிந்தவன். சில மாதங்களுக்கு முன்னர், நான், நீங்கள், விஷ்வா மட்டுமே கேரள பரம்பிக்குளக் காட்டிற்கு சென்ற நீண்ட கார் பயணத்தின் போதும், ரிசாட்டில் இரவு இரண்டு மணி வரை நாம் விவாதித்த போதும், நீங்கள் கமலிடம் காட்டும் அன்பையும், கமலின் முயற்சிகளையும், அவரின் பெரும்பாலான படங்களுக்கு தாங்கள் எழுதியுள்ள  நல்ல விமர்சனங்களையும், உண்மையிலேயே சிலாகித்தீர்கள்.  மேலும் குற்றால வாசகர் சந்திப்பில் கூட, கமலின் திறமை குறித்தும் மிக நீண்ட நேர்மறையான விவாதங்களை நீங்கள் எடுத்து வைத்தது, என்னுள் நிழலாடுகிறது… ஒரு உண்மையான அறிவுஜீவியை அவமானப்படுத்தியதற்கு கமல் தான் வருந்த வேண்டும். நீங்கள் ஏன் பொது நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் சாரு? கற்பூர வாசனையை உணரத் தெரியாதவர்களுக்காக நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள் ? உங்களுடன், என்றும் உங்களால் பயனடைந்த நாங்கள் இருக்கும் போது… உங்களின் இந்தக் கட்டுரை முழுவதுமே முற்றிலும் உண்மை. உண்மை தான் கடைசியில் வெல்லும் சாரு…

அருணாசலம்.

சாருவை வெறுப்பது அவரை புறக்கணிப்பது போன்ற பக்கித்தனமான வேலையைக் காட்டினால் அறிவாளி இமேஜ் / முகமூடி எந்த மொக்கைக்கும் தானாக வந்துவிடும் என நினைத்திருந்தேன். ம்ம்ம்ம் கமலுக்குக் கூட அது தேவையாருப்பதை நினைத்து …. என்ன சொல்ல. 

நிர்மல்

கமல் சாருவைப் பார்த்து கை குலுக்கவில்லை என்பது  பற்றியல்ல சாருவின் கடிதம்.

சின்ன ஒரு நிகழ்வோடு தன் நிலையையும் நாம் வாழும் இச் சமுகத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்கச் செய்வது இந்தக் கடிதம். இதெல்லாம் கமலுக்கென்றால் அவரின் போன் நம்பருக்கு குறுச் செய்தியாகக் கொடுத்துவிடலாம். இது அவருக்கான கடிதமில்லை, நமக்கும் pseudo அறிவாளிகளுக்கும் என்பது என்னைப் போன்ற ஆரம்ப நிலை வாசகனுக்குக் கூட புரியும் பொழுது, பெரும் புலவ ஸ்காலர்களுக்குத் தெரியாமல் போவதுதான் சாருவின் மேஜிக்.

நிர்மல்

என் நண்பர் மதன் மூலமாக கமலுக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பி அடுத்த நாளே பார்த்து விட முடியும்.  ஆனால் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை.  இதை பொதுவெளியில் வைத்து விவாதிக்க விரும்புகிறேன்.  எழுத்தாளனை மதிக்காத சமூகம் என்று நான் சொன்னால் அதைப் புரியாதது போல் நடிக்கும் ஊடக நண்பர்களுக்காகவே இந்தக் கடிதத்தைப் பொதுவெளியில் வைத்தேன்.  

சாரு

இந்த நிகழ்வு மீண்டுமொரு இழிவான தமிழ் சூழலுக்கு எடுத்துக்காட்டு… எந்த விதத்திலும் ஒரு சினிமா ஹீரோ இலக்கியவாதியை விட மேலானவனே என்ற பாமர மனப்பான்மை இங்கே எல்லோரிடமும் இருக்கிறது. ஞாநி போன்றவர்களின் விளக்கம் கூட சாருவின் இந்தக் கட்டுரைக்கு பதில் சொல்வதாக எண்ணிக்கொண்டு இந்தப் பாமர மனப்பான்மையை பிரதிபலிக்கின்றன.

இந்தக் கட்டுரையை படித்த எவருக்கும் கண்ணில் ஒரு துளி கண்ணீர் வருவது திண்ணம். கமலுக்கும் அதுபோன்ற உணர்வு இருந்தால் குறைந்தபட்சம் மனிதனாகவாவது அங்கீகரிக்கலாம். அப்படியல்லாமல் இதைக் கண்டுகொள்ளாமல் கடந்து போவாரேயானால் கமல் ஒரு காப்பி பேஸ்ட் சினிமாக்காரர், தகுதியே இல்லாத அங்கீகாரம் கிடைத்த ஒரு சாதாரண சினிமாக்காரர் மட்டுமே.   உங்கள் முன்பு கமல் ஒன்றுமேயில்லை சாரு!

டேய் மனோ

என்னை நீ உதாசீனப்படுத்தி விட்டாய்; அதனால் நான் உன்னை உதாசீனப்படுத்துகிறேன் என்பதில் என்ன மேன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.   அன்பு என்றால் இந்த pseudo அறிவாளிகளுக்கு எங்கு புரிகிறது. என்னை உனக்குப் பிடிக்கவில்லை என்பதால் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்பதில் இருப்பது என்ன? அதைவிட, என்னை உனக்குப் பிடித்தாலும் சரி பிடிக்காவிட்டாலும் சரி எனக்கு உன்னைப் பிடிக்கிறது, பிடிக்காமல் இருக்கிறது…  இதில் எது உசத்தி, எங்கே சுய மரியாதை இருக்கிறது, அறம் இருக்கிறது, அன்பு நேசம் பற்றிய எழுத்துக்களிலும் விஷத்தைக் கலக்கும் கோஷ்டி அவிங்க…
நிர்மல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.