பேரின்பம்

அன்புள்ள சாரு,

சில மாதங்களுக்கு முன் இப்பாடலை ஒரு பரத நாட்டிய மயிலாட்டத்துடன் கேட்டு வசப்பட்டேன் . மலையாளம் தெரியாமற்ப் போனாலும் புரிந்த சில வார்த்தைகளிலேயே குரலுக்கும் (எனக்கு பிடித்த உள்ளூர் பெண் ஒருவர்), இசைக்கும், நடனத்துக்கும் மேலாக வேறு ஏதோ ஒன்று வெகுவாக ஈர்த்து இளமைக்கால கோடை மழையின் பக்கம் இழுத்துச் சென்றது.

https://www.youtube.com/watch?v=zI0kHABugbQ

பாடல் வரிகளை மறந்ததால் மேற்கொண்டு தொடர முடியவில்லை. பின்னர் நீங்கள் காவலம் ஸ்ரீகுமாரை அறிமுகப்படுத்திய போது இப்பாடலை மறுபடி கண்டு கொண்டேன். அந்தக் கவிதையின் அர்த்தமும் இங்கு படித்த போது:

https://www.facebook.com/CorpusJurisCivilisCodexAgapao/posts/477217685678849

ஆன்மீகம், இயற்கை அழகு, சமூக இடர்ப்பாடுகள், கொண்டாட்டங்கள் என்று அனைத்தையும் ஒரு சில வரிகளில்  ஒன்றிணைத்ததைக் கண்டு வியக்க வார்த்தைகளில்லை.

மரங்களுக்கு ஹார்மானிக்கா வாசிப்பவர் பற்றி நீங்கள் எழுதியது படித்ததும் இதை உங்களுடன் பகிராமலிருக்க முடியவில்லை .

மேலும் நேற்று Kaushiki Chakrabarty யின் கச்சேரி நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது . இதில் உங்களுடன் வேறுபாடு கொள்ள வேண்டியுள்ளது. கட்டாயம் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே இவரைக் கேட்க வேண்டும்.

அவர் பேரழகிதான், ஆனால், அந்தச் cherubic முகத்தில் துள்ளும் குதூகலமும், நீண்டு மெலிந்த விரல்களில் பிடிக்கும் அபிநயங்களும் அவர் இசையுடன் கலந்து, ஒரு serial killer மனதில் கூட தாய்மை பொங்கச் செய்யும் என்றே நினைக்கிறேன். Perhaps I need a testosterone check, but I’ll gladly embrace impotence  if I have to,  to have this experience without distraction.  சிற்றின்பம் என்ற  பெயர்  எப்படி வந்தது என்று புரிகிறாற்  போலுள்ளது.

இத்தகைய ரசனைகளுக்கு வழி கோலும், செம்மைப்படுத்தும் ஆசானை என்றாவது நேரில் பார்ப்பேனோ என்று தெரியவில்லை. பார்த்தாலும் பேசத் தெரியாது, சில துளி கண்ணீராவது வரும் அளவு மனம் கணிந்திருந்தால் சந்தோஷமடைவேன் .

அன்புடன்

அஸ்வினி குமார்

Comments are closed.