எதிர்வினைகள்…

அன்புள்ள ஆசானுக்கு,

கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் படித்து உள்ளுக்குள் கதறி விட்டேன்  அழுகையும்  வந்துவிட்டது.  குழந்தைகளின் அன்பு சில முரடர்களுக்குப்  புரியாமல் போய்விடுகிறது. ஆமாம்,  நீங்கள் எங்களுக்கு என்றுமே செல்லக் குழந்தைதான்.  உங்களைச் சீராட்ட நாங்கள் இருக்கிறோம். அன்பெனும்  உங்கள் எழுத்தால்  எங்கள் சிந்தனைகளை வடிவமைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்காக  உயிரையும் சித்தமாக்குவோம்.

கடவுளிடம் என் வாழ்நாளிலிருந்து பல நாட்களை  உங்களுக்குக் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.

மாரி மலைமுழஞ்சில்  மன்னிக் கிடந்துறங்கும்  சீரிய சிங்கம் நீங்கள்

வேரிமயிர் போங்க வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படுங்கள் ..

மிக்க அன்புடன்,

உங்கள் தீரா வாசகன்  சம்பந்தர்.

***

சாரு,
வணக்கம்.

என்ன மாதிரி ஒரு எழுத்தாளர் நீங்கள்…. காமரூப கதைகள்…. ஸீரோ டிகிரி  படித்து விட்டேன்.. இனி ஒவ்வொரு நாவலாக படிக்கப் போகிறேன்…. நிஜம் கொட்டிக் கிடக்கிறது உங்களிடம்.  அதுதான் மற்றவர்களை சுட்டுக் கொண்டே இருக்கிறது.  நீங்கள் தொடருங்கள், உங்களைப் படிக்காத தமிழ் சமூகம் எப்படியோ போகட்டும்…  எதார்த்தத்தின் வெளிப்பாடு உங்கள் நாவல் போலத்தான் இருக்கும்…. நல்லவனாக இருப்பது என்பது குறைந்த பட்சம் பத்து முகமூடிகளையாவது  போட்டுக் கொள்வது தான்….. கெட்ட வார்த்தை பேசுகிறான் என்றால் ஏண்டா  அந்த வார்த்தைகளை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்…. என்று கேட்கத் தோன்றுகிறது……உங்கள் கதைகளில் (படித்த இரண்டிலும்) தேவை இல்லாமல் வலிய எந்த இடத்திலும் கெட்ட வார்தைகள் என்று சொல்லப்படும் வார்த்தைகளை நீங்கள் எழுதவில்லை….அது ஒரு மென் மற்றும் வன் கவிதையாக கடந்து விடுகிறது….. வக்கிரம் என்று பேச எவனுக்கும் தகுதி இல்லை…. இருட்டுக்குள் அவனவன் அறையில் அவன் யாரென்று அவனுக்குத் தெரியும்…. உங்களைப் போலவே நானும் மிகவும் வருந்தும் இடம்.. நம் மக்களின் படிக்கும் பழக்கம்…. பெரும்பாலான மூடர்கள் முகப்புத்தகத்தில் காணாமல் போவதைத்தான் விரும்புகிறார்கள்…. என்ன செய்ய…

நீங்கள் சொல்வதைப் போல் உங்களைப் படிப்பவர் ஒன்று உங்களை மிகவும் நெருங்கி விடுகிறார்கள், அல்லது மிகவும் ஒதுங்கி விடுகிறார்கள். நான் முதல் பிரிவு…

நீங்கள் எழுதுங்கள் சாரு… காசு கொடுத்துப் புத்தகம் வாங்கி படிக்க என்னை மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்…

ப்ரியமுடன்

கவிஜி
கோவை

 

 

 

Comments are closed.