கமலுக்குக் கடிதம்: விவாதம் (5)

முகநூலில் சுந்தர் ஸ்ரீனிவாஸ் என்ற நண்பர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கமலஹாசனுக்கு ஒருக் கடிதம்’ இப்போது தான் படித்தேன். சாரு ஒரு அற்புதமான மனிதர் என்பது இன்னுமொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

போன ஆட்சியில் ஜெயாTVயில் ஒவ்வொரு முறை தமிழக அரசைக் குறிப்பிட நேரும் போதும், ஏதோ initial சேர்த்து சொல்வது போல ‘minority தி.மு.க. அரசு’, ‘minority தி.மு.க. அரசு’ என்றே தொடர்ந்து விடாமல் ஐந்தாண்டுகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதே போல ஒவ்வொரு முறை கமல்ஹாசனைப் பற்றி எழுதும் போதும் Alpachenoவின் தமிழ்நாட்டு நகலாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் என்றுத் தொடர்ந்து mention பண்ணிக் கொண்டு வந்தவர் தான் சாரு. இன்று புதிதாய் ‘உங்களின் இரண்டுப் படங்களை மட்டுமே நான் விமர்சித்துள்ளேன்’ என்று குருதிப்புனலையும் தசாவதாரத்தையும் மட்டும் குறிப்பிடுகிறார். கமலின் கடைசிப் படமான விஸ்வரூபத்தைக் கூட இவர் rod ஏற்றியதாகத் தான் நியாபகம். தான் எப்போதுமே பொதுமக்களையும் புதிய வாசகர்களையும் சந்திப்பதில் எந்த தயக்கமும் இல்லாதவன் என்ற தன் standஐ நிறுவ, ‘’மக்களுடன் தொடர்பே இல்லாமல் அந்நியவெளியில் புழங்கிக் கொண்டு மக்களுக்கான கலை செய்கிறேன் என சொல்லிக் கொள்ள நான் என்ன கமலஹாசனா?’’ என்று சாரு ஒரே ஒரு முறையா நக்கலடித்திருப்பார்? இவ்வளவு ஏன்? ‘நிகழ மறுத்த அற்புதம்’ என்ற தலைப்பு ஒன்றே எல்லாவற்றையும் சொல்லும். நடிகராக, இயக்குனராக, அரசியல்வாதியாக எனத் தொடர்ந்து கமலின் எல்லா facetsஐயும் காத்திரமாக நிராகரித்து வந்தவர் தான் சாரு என்பது நிறுவதல் கோராத நிஜம்.

ஆனால் இப்போது என்ன ஆயிற்று? ‘’கமலை விமர்சித்ததை விட சிலாகித்ததே அதிகம்’’ என்று ஒரு பகீர் statement விடுகிறார். அதை வாசிக்கும்போது நமக்கு ‘பக்கோ’ என்றிருக்கிறது.

ஆனால் இதில் ஆச்சர்யப் பட எதுவுமே இல்லை. இது தான் சாரு. இப்படித் தான் அவர் காலம்காலமாகவே இருந்திருக்கிறார். நாம் எல்லாருமே பிறந்து நினைவறிந்த நாள் தொட்டு இதுகாறும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருப்பதில்லை. குறைந்தது பத்து break-upகளாவது சந்தித்திருக்க வேண்டும். அப்புறம் கற்பு என்றால் middle finger காட்ட வேண்டும். கண்டிப்பாக virginஆக இருக்கக் கூடாது. பதினெட்டு வயதில் ஒரு dreamgirlக்கான என் requisiteகளாக இவையே இருந்தன. அது, இருபத்தி ஒன்றிலும், இப்போதும் என முறையே இரண்டு amendments கண்டுவிட்டது. (இனி காணாது, உறுதியாக)

இதைப் போலவே ஆதாயமற்ற realizations, learnings, moodswings தான் சாருவுடைய அந்தர்பல்டிகளும். உதாரணமாக, கலைஞர் கட்சி மாறினால் அது ராஜதந்திரம். அவருடைய stand swing அப்படியே ஓட்டாக மாறும், at least துட்டாகவாவது மாறும். ஆனால் சாருவின் mood swingல் அவருக்குப் பைசாவுக்குப் பிரயோஜனம் இருக்காது. இணையத்தில் வண்டு வாண்டு எல்லாம் கழுவி ஊற்ற கேட்டுக் கொள்வது தான் மிச்சம்.

ஆனாலும் அவர் ஏன் எதிர்வினைகள் பற்றிய எந்தப் பதற்றமும் இல்லாமல் அதை தொடர்ந்து அனாயசமாக செய்து வருகிறார்? ரொம்ப simple. இந்தாளுக்கு தன் மனசுக்குள் தோன்றுவதை எல்லாம் உள்ளது உள்ளபடியே அப்படியே வெளியில் சொல்வதைத் தவிர வேறு ஒரு optionம் இருக்கிறது என்பதே தெரிந்திருக்கவில்லை. எழுதுவதில் இவருக்கு இருக்கிற ஒரே choice நேர்மை மட்டும் தான். அதனால் தான் லக்ஷ்மி சரவணகுமாரையும், குமாரகுருபனையும் சிலாகித்து எழுதிய ஈரம் காயும் முன் தூற்றுத் தள்ளுகிறார். With no regret of having praised and no fear of consequences.

அப்போ இவருக்கு ஏதாவது உளவியல் பிரச்சனையா? நிச்சயமாக yes. ஆனால் இவருக்கு மட்டும் இல்லை. எல்லாருக்கும் இருக்கிற அதே உளவியல் பிரச்சனை தான் சாருவுக்கும்.. எல்லாருக்கும் இருக்கிற அதே அளவில் தான். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் நமக்கெல்லாம் கூடுதலாக இரண்டுப் பிரச்சனைகள் உண்டு.. Diplomacy மற்றும் hypocrisy ஆகிய இரண்டு பிரச்சனைகள் நமக்குத் தான். அவரிடம் இருக்கிற transparency is always too luxurious for the laymen like us to afford.

கமல்ஹாசனை விடுங்கள். தனது வாழ்நாள் rivalryயாக அவர் கருதிவந்த ஜெமோவின் மகாபாரதத்தைப் பாராட்டுவதில் அவருக்கு இத்தனூண்டு second thought கூட இல்லையே. கீதையின் கடைசி ஸ்லோகத்திற்கு பொழிப்புரை எழுதியுள்ளதில் தன் ஆசான் பாரதியை விஞ்சிவிட்டார் ஜெமோ என்று அங்கீகரித்து எழுத எத்தனை பெரியமனுஷத் தனம் வேண்டும்? ஆனால் சாருவின் தீவிர fanஆக தன்னைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்த விநாயக முருகன், அவர் தன் நாவலை நிராகரித்த பிறகு facebookல் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். என்ன status போட்டாலும் அதில் சாருவின் மீதுள்ள வன்மத்தை ஒரு இயக்குனர் பாலா rangeக்கு கக்கிக் கொண்டிருக்கிறார். ‘’நேற்றுகூட ஒரு இளம் எழுத்தாளர் புத்தகம் படித்தேன்.. ஒரே எழுத்துப் பிழை.’’ இவ்வளவுதான் சாரு விமு குறித்தும் அவர் நூலைக் குறித்தும் தன் வலைப்பதிவில் கொடுத்திருந்த அதிகபட்ச விவரணையே. அந்த இளம் writer தான் தான். சாருவுக்கு மட்டுமல்ல, என் மனைவிக்கே என்னை பிடிக்கவில்லை என அதைப் பொதுவெளியில் அம்பலப் படுத்தி wantedஆக வண்டியில் ஏறியவர் விமுவே தான். கூட இருந்த வண்டியில் ஏற்றிவிட்டவர் மனுஷ். நேற்று கூட புலியடித்து இறந்த இளைஞனின் சாவுக்கு முந்தைய நொடிகளின் பதற்றத்தை பகடி செய்கிறேன் பேர்வழி என்று சுகா எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டார். குறைந்தபட்ச மனசாட்சியுள்ள யாரும் அதற்கு வினையாற்றாமல் கடக்க மாட்டார்கள். ‘’After all ஒரு statusக்கு இப்படிக் கொதிக்கிரார்களே’’ என பின்னூட்டம் இட்டவர் தான் விமு. ஆனால் இப்போது இவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகி விட்டார்கள், சாரு அயோக்கியர் ஆகிவிட்டார்.

இவ்வளவு ஏன்? அறச்சீற்றத்துக்குப் பேர்போன தொலைகாட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர் மனுஷ் ஒரு முறை ஒரு status போட்டிருந்தார். அன்று கண்ணதாசன் பிறந்தநாள். ‘’கண்ணதாசனின் மகத்துவத்தை நன்கு உணர வைத்துள்ள சமகால பாடலாசிரியர்களுக்கு நன்றி’’ என்று status போட்டிருந்தார். உன்னைபோல் ஒருவன் படத்துக்கு பாட்டெழுதியவருமா மனுஷ் என்று நான் பின்னூட்டத்தில் கேட்டேன். அப்புறம் என்ன ஆகியிருக்கும் என உங்களுக்கேத் தெரியும். அதிலிருந்து கிஷோர் profile பார்த்து தான் மனுஷ் status தெரிந்துக் கொள்கிறேன். இதனால் தான் நான் எப்போதுமே மனுஷை pseudo-democrat என்று சொல்வேன். அவர் நிகழ்த்திக் கொண்டிருப்பது ஒரு opinion dictatorship. அவர் மோசமான ஒரு பார்ப்பனர். இவர்கள் எல்லாம் நுண்ணர்வு பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருப்பது தான் ‘யாத்தே காலக் கூத்தே’.

இங்குப் பிரச்சனையே சாரு நல்லவர் என்பது தான். அதனால் தான், ‘அதெப்படி கெட்டவராக எல்லாம் இருக்க முடியும்?’ என்று அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணமாக, சாருவுக்கு விமர்சகர் வட்டம் என்று ஒன்று உள்ளது. இவர்கள் காலை எழுந்தவுடன் பல் தேய்த்துவிட்டு செய்கிற முதல் வேளை சாரு blog படித்துவிட்டு, வாசகர்வட்டம் எட்டிப் பார்த்துவிட்டு, ஆபாச அஞ்சல் எழுதிவிட்டு, facebook வட்டத்தில் விமர்சித்துவிட்டு, அப்புறம் தான் தங்கள் தின அலுவல்களையே செய்கிறார்கள். அந்த விமர்சக வட்டத்தின் ஆட்கள் சிலர் bookfairன் போது அவருடன் photo எடுத்துக் கொண்டு அதையும் facebookல் போட்டு like வாங்குவதைப் பார்த்திருக்கிறோம். தன்னைத் தொடர்ந்து, விமர்சனம் என்ற பேரில் சேறு வாறித் தூற்றும் மனிதர்களுடனும், ‘’உலகத்தின் மொத்த அன்பையும் கண்களில் சுமந்துக் கொண்டு’’ photo எடுத்துக் கொள்ளும் சாரு, அதே மாண்பையும், உயர்வையும், நாகரிகத்தையும், மேன்மக்கள்தனத்தையும் கமலிடம் எதிர்பார்க்கிறார். சுடுகிறப் படத்தின் original credits கொடுக்கிற basic நாகரிகம் கூட இல்லாத கமலிடம் சாரு இதை எதிர்ப்பார்ப்பது அபாண்டம் என்பதை அவருக்குக் காலம் உணர்த்தட்டும்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மனசு சாருவுக்கு உண்டு. நாகேஸ்வர ராவ் பூங்காவில் அவரும் ராகவனும் அந்த mouth organ playerம் விருட்சங்களும் இணைகிறப் புள்ளி இருக்கிறதே அது ஒரு மகா அற்புதம் என்ற வார்த்தைகளை எழுதும் மனசில் அன்பைத் தவிர எதற்குமே இடமிருக்க வாய்ப்பில்லை.

சாரு என்பவர், french beard வைத்துள்ள, கெட்ட வாரத்தை பேசும், உலக இலக்கியம் படித்த, நூற்று எண்பது நிமிஷங்கள் இயங்கும் ஒருக் குழந்தை. அதனால் தான் ஒரு சர்வாதிகாரி தனக்கு முகமன் கூறவில்லை என்பதைக் கூட அந்தக் குழந்தையால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

சாருவைப் புரிந்துக் கொள்ள நீங்கள் சாருவாய் இருக்க வேண்டும். ஆனால் சாருவாய் இருப்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல.

***

மேலும் பின்னூட்டத்தில் சுந்தர் ஸ்ரீனிவாஸ் இப்படி எழுதுகிறார்.  இவருடைய ஆங்கிலத்தைப் பார்க்கும் போது ராஸ லீலா மொழிபெயர்ப்புக்கு அணுகலாமா என்று யோசிக்கிறேன்.

Charu’s hands certainly have stains. I wonder if those who kick his ass from behind are above suspicion. 

I am surely a neophyte as a Literature spectator. And this is the way I perceived him with the raw him I got to befriend through his narratives and columns. I maybe wrong. I may not be. I believe what I see and I write what I believe. Probably I should wide open my eyes. 

And ‘worship’ is way too harsh a word.. I keep saying him my demigod, but definitely not God.. You definitely know, I am not even an dormant member of his readers clique. There might be a point of time, when you thought like me in the past. And a time may come, I might agree to you. I fervently wish such a time should never happen in my life.

As of now, lets agree to disagree.

***

இனி நான்.  அதாவது சாரு.  சுந்தரின் எதிர்வினை எனக்குச் சில விஷயங்களைக் கற்றுக் கொடுத்தன.  நான் கமலுக்கு எழுதிய கடிதத்தில் கொஞ்சம் அன்பைக் கலந்து விட்டேன்.  அது தவறு என்பதைச் சுட்டியிருக்கிறார் சுந்தர்.  சுந்தர் சொல்லியிருப்பதை ஏற்கிறேன்.  இனிமேல் கடிதம் எழுதும் போதும் கறாராகவே இருக்கிறேன்.  ஆனால் நேரில் கை கொடுக்கும் போது கண்களில் அன்பு தெரியும்.  அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.  என் கரங்களில் கரை படிந்திருப்பதாக எழுதுகிறார் சுந்தர்.  படிந்திருந்தால் நான் இப்போது போல் நிம்மதியாக உறங்க முடியாது.  கைக் கரை நிம்மதிக்குக் கேடு.  ஒருவேளை சுந்தருக்கு அப்படித் தோன்றலாம்.  மேலும், ஒரு எழுத்தாளனை வெறும் கட்டுரைகளை மட்டும் வைத்து அளவிடுவது அவனுக்குச் செய்யும் மிகப் பெரிய அவமானம்.  ராஸ லீலா 700 பக்கத்துக்கு எழுதியிருக்கிறேன்.  என் ரத்தம்.  என் ஆன்மா.  என் வாழ்க்கை.  என் உயிர் மூச்சு.  அதைப் பற்றிப் பேசுவோம் வாருங்கள் சுந்தர்.  ஒரு இண்டலெக்சுவல் புடுங்கி என்னுடைய ஸ்வராஜ்யா கட்டுரை இண்டெலெக்சுவலாக இல்லை (அதாவது பாமரத் தனமாக இருக்கிறது என்று பொருள்) என்று எழுதியிருக்கிறார்.  இந்தப் புடுங்கி ஏன் ராஸ லீலா பற்றியோ என்னுடைய மற்ற நாவல்கள் பற்றியோ பேச மறுக்கிறது?   காரணம், அது கஷ்டம்.  700 பக்கம் படிக்க வேண்டுமே?

சுந்தர் ஸ்ரீனிவாஸின் எதிர்வினையை நான் மதிக்கிறேன்.  என்னைத் துப்புரவாகப் பின் தொடர்கிறார் என்று தெரிகிறது.  இப்ப்படிப்பட்ட வாசகர்களுக்காகவேனும் நான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறேன்.  மற்றபடி சுந்தரை மறுப்பது என் நோக்கம் அல்ல…

சுந்தர் ஸ்ரீனிவாஸுக்கு என் மனமார்ந்த நன்றி…

Comments are closed.