exile (new)

இன்று மாலை ஆறு மணிக்குள் எக்ஸைல் 2ஐ முடித்து விடுவேன். 1700 பக்கங்களில் 1300 பக்கங்களை எடிட் செய்து விட்டேன். நேற்று சுந்தர் சொன்னதால் நேற்று மதியம் மூன்று மணியிலிருந்து இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு அத்தியாயம் கடைசியில் சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் தான் ஆகும். அந்த அத்தியாயம் ஒரு little apocalypse. தானாக அப்படி ஒரு முடிவு வந்தது. இறைவனுக்கு நன்றி. இப்போது அனிஸ் மூன்றாவது ரவுண்ட் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆறு ரவுண்டுக்குள் எக்ஸைல் முடிவை எழுதி விடுவேன். நேற்று சுந்தர் 15 கேள்விகள் கேட்டார். பதில் சொல்ல மூன்று மணி நேரம் ஆயிற்று. என்னிடம் வாய்ஸ் ரெக்கார்டர் இருந்தும் ரெக்கார்ட் பண்ணவில்லை. அதுதான் என் வாழ்விலேயே எடுக்கப்பட்ட மிக முக்கியமான நேர்காணல். டிஷானி எடுத்ததை விட சிறந்த நேர்காணல். துரதிர்ஷ்டம் பதிவு இல்லை. சுந்தரின் ஞாபக சக்தியை வைத்து எழுதினால் உண்டு. சுந்தர்… முடிந்தால் என் பதில்களை எழுதுங்கள். உங்கள் கேள்விகளில், ”மது அருந்தி விட்டு எழுதுவீர்களா?, எந்த நேரத்தில் உங்களுக்கு எழுதப் பிடிக்கும்?” என்ற இரண்டு கேள்விகளையும் ரொம்ப ரசித்தேன்.  மற்ற கேள்விகள் மிகவும் erudite ஆனவை.  எனக்கு மிகப் பிடித்த உரையாடலாக அது இருக்கும்.  நேர்காணல் என்பதை விட அதை ஒரு உரையாடல் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

அற்புதம்.

Comments are closed.