மெட்ராஸ் : விமர்சனம்

நான் மெட்ராஸ் இன்னும் பார்க்கவில்லை.  ஆனால் சுந்தர் ஸ்ரீனிவாஸின் மதிப்புரையைப் படித்த பின் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.  திங்கள் கிழமை செல்லலாம் என்று இருக்கிறேன்.  யாரேனும் டிக்கட் எடுத்து அனுப்பினால் மிக்க நன்றி.  பின் வருவது சுந்தர் ஸ்ரீனிவாஸின் மதிப்புரை:

சென்னைக்கு நிறைய முகங்கள் இருக்கின்றன, நிறைய நிறங்கள் இருக்கின்றன. அதில் வடசென்னையின் நிஜ நிறத்தை அசலாகப் பதிவு செய்துள்ள படமாக மெட்ராஸ் வந்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு நடந்துள்ள மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நான் நம்புவது, இதன் காளி (கார்த்தி) கதாபாத்திரத்தை தனுஷ் நடிக்காதது. ஏனென்றால் இந்தக் கதாப்பாத்திரத்திற்கென்றே பிறந்தவர் அவர் தான். ஆனால் தனுஷ் நடிக்கும் போது, C center audienceன் கைத்தட்டல்களை அள்ளுவதற்காகவே சில வஸ்துகள் திணிக்கப்பட்டு, கொஞ்சம் heroism சேர்க்கப் பட்டு, அந்தப் படத்தின் colourஏ மாறுகிற அபாயமுண்டு. (திருஷ்யத்திற்கும் இதே தான் நடக்கப் போகிறது). இந்த area பசங்களுக்கே இருக்கிற இயல்பான துடுக்குத்தனத்தை, அதற்கு எந்த hero அந்தஸ்தும் தராமல் அசலாகப் பதிவு செய்துள்ளது பெரிய விஷயம்.

இதே line of filmsல் புதுப்பேட்டையும் ஆரண்யகாண்டமும் வருகின்றன. ஆனால் அவற்றை விட மெட்ராஸை முக்கியமான படமாகக் கருதுகிறேன். முன்னவை இரண்டுமே gangster அரசியல் படங்களாக இருக்கின்றன. தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள அதிகாரத்தைக் கைக்கொள்ளத் துடிப்பவர்களின் கதைகள் அவை. ஆனால் மெட்ராஸோ, அதிகாரச் சுவரைத் தகர்க்கத் துடிக்கிற அன்பு என்கிற எளிய மனிதனுடைய நண்பனின் கதை.

Local politicsல் ஊறிப் போனவர்கள், தெருமுனைகளில் இரண்டு bikeகளை சேர்த்துப் போட்டு carrom விளையாடுகிறவர்கள், dance team, dope அடித்துப் பிறழ்ந்த ஜானிக்கள், football tournament ஆடுகிறவர்கள், படித்து ITக்குள் வந்துவிட்ட இளைஞர்கள், பச்சையிலும் மஞ்சளிலும் இன்னும் அடிக்கும் நிறங்களில் இங்கிலீஷ் வாசகங்கள் தாங்கிய teeshirt போடும் spikes வைத்த wannabe yo yo boys… என area coverage பக்கா..

இயக்குனருடைய frame sense அபாரமாக இருக்கிறது. Focus subjectஐச் சுற்றியுள்ள set propertyக்களைத் துல்லியமாகப் பயன்படுத்தி பக்காவான mood கொடுக்கிறார். மைதானத்தில் கார்த்தியை நாயகி திட்டும் போது, ”ஏய்.. அந்தக்கா காளியண்ன திட்துடா” என பொடியன்கள் பின்னணியில் பேசிக் கொள்வது DTSல் துல்லியமாகக் கேட்கிறது. நிறைய காட்சிகளில் focus அன்பின் மீதிருக்க பின்னணியில் கார்த்தி அன்பைச் சுட்டி நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த ethnic filmக்கு global music கொடுத்திருக்கிற Sandy Narஐ எவ்வளவு தான் பாராட்டுவது. அன்பின் பிரேதத்துக்கு முன்னால் இசைக்கப் படுகிற மரண கானா, top notch. அனிருத்களுக்கும் இமான்களுக்கும் நடுவில் Sandy Narஉடைய இசைத் தொடர்ந்துத் தனித்து ஒலித்து வருகிறது. How I wish he goes places.

கார்த்திக் சுப்புராஜ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், நளன் குமாராசாமி, பாலாஜி மோகன், அல்ஃபோன்ஸ் புத்திரன், மூடர்கூடம் நவீன் என இந்த fresh crew of filmmakers தமிழுக்குப் புதிய நிறம் பாய்ச்சுகிறார்கள். இவர்கள் எல்லாரிடமும் இரண்டு ஒற்றுமைகளைப் பார்க்கிறேன். முதலாவதாக, இவர்கள் இசையை பயங்கரமாக மதிக்கிறார்கள். இசை நகர்த்திக் கொண்டுப் போவதாகவே தம் திரைக்கதைகளை அமைத்துக் கொள்கிறார்கள். அடுத்த ஒற்றுமை இவர்கள் எல்லோருமே romanceலும் score பண்ணுகிறார்கள். இது நம் genreயில் வராதே என்று ஒதுக்காமல், சின்ன love portion வந்தால் கூட நேர்த்தியாகக் கையாள்கிறர். இந்தப் படத்தில் அன்பு மேரி romance கவிதையாக வந்திருக்கிறது. ஆனால் பின்பாதியில் காளி கலையரசி பேசிக் கொள்ளும் ‘உனக்கு என்ன எவ்ளோ பிடிக்கும்’ காட்சி அப்பட்டமானத் திணிப்பு.

ஆனால் மொத்தப் படமாக இது தேறுகிறது. இது மாதிரி genreயை grim tone இல்லாமல், வேறு ஒரு colour and feelல் கொண்டு வந்திருப்கதற்கு, பெரிய applause. கத்தி எடுத்தவன் கத்தியால சாவான் என முடிக்காமால், கல்வியைத் தீர்வாக முன்வைத்துள்ள positivityக்கு ஒரு royal salute அடிக்கலாம்.

மிக முக்கியமாக இந்தப் படத்தை நான் பார்த்தது, ஒரு certified North Madras connosieurஉடன். அவருடைய பொழிப்புரையில் படம் வேற ஒரு levelல் tune ஆகிப் புரிந்தது. படம் முடித்து dinnerன் போது எங்கள் மொத்த வித்தயும் எறக்கிப் பேசிக் கொண்டிருந்தோம்.

Dude, இந்த திராவிடம், communism, தமிழ்தேசியம்.. Nothing will help dude. நம் கைகளில் இருக்கிற ஒரே ஆயுதம் நம் குழந்தைகள் தான். என் குழந்தைக்குத் தான் என்ன ஜாதி என்று மட்டுமல்ல, ஜாதியென்றாலே என்னவென்று தெரியாமல் தான் வளர்ப்பேன் dude.

Comments are closed.