ஒரு கடிதம்

Hi Charu,

 உடல் எடைக் குறைப்புக் கட்டுரை முற்றிலும் fake.  ப்ராஸ்டேட் கேன்சர் பற்றிய கட்டுரை fake கிடையாது; ஆனால், unproven, not widely accepted among medical fraternity; the research still has to undergo multiple trials to be placed in textbooks and to be widely accepted in medical fraternity.
“According to a new study” என்று ஆரம்பித்து, வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் மருத்துவ கட்டுரைகளை முற்றிலும் fake என்று சொல்ல முடியாது. ஆனால், உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஒன்றை எடுத்துத் தங்கள் பத்திரிகைகளில் போட்டு விடுகின்றனர். உதாரணமாக, சில வருடங்கள் முன் சின்ன வெங்காயம் சாப்பிட்டால் புற்று நோய் வராது என்றொரு ஆராய்ச்சியில் சொன்னார்கள். ஆனால், அது proven இல்லை.
வெகுசனப் பத்திரிகைகள் தங்கள் circulation அதிகரிப்பதற்காகவும், தாங்கள் மருத்துவத் துறையில் updated ஆக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும், அவ்வப்போது இவ்வாறு செய்திகளைக் கொணர்கின்றன.
டாக்டர் ஸ்ரீராம்.

Comments are closed.