தமிழ் ஸ்டுடியோ திரையிடல்

நாள்: 02-11-2014, ஞாயிறு, மாலை 6 மணிக்கு.

இடம்: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111 & 9840698236

திரையிடப்படும் படம்: The White Balloon (இயக்கம்: ஜாபர் பனாஹி)

நண்பர்களே, சிறுவர்களின் திரைப்பட ரசனையை வளர்க்கும் பொருட்டு, தமிழ் ஸ்டுடியோ மற்றும் சாதனா நாலெட்ஜ் பார்க் இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வில் இந்த மாதம், ஜாபர் பனாஹி இயக்கத்தில் வெளியான, வொயிட் பலூன் திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது. மொழி என்கிற எல்லையை தண்டி, சிறுவர்களின் இயல்பான புரிதலுக்கு எவ்வித தடங்களும் ஏற்படுத்தாத, காட்சிமொழியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை, நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து கண்டுகளிக்க வேண்டுகிறேன். உங்கள் குழந்தைகளின் உலகை நீங்கள்தான் மாற்றியமைக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் முன் ராடச்சசத் தனமாக இருக்கும் மிக மோசமான பிம்பங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க இதுப்போன்ற சிறந்த பிம்பங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே சிறந்த வழி.

அனைவரும் வருக.. அனுமதி இலவசம்.

(குறிப்பு: ஞாயிற்றுக்கிழமை வம்சி புக்ஸ் சார்பாக நடக்கும் புத்தக வெளியீட்டு நிகழ்வும் நடைபெறவிருக்கிறது. எனவே இலக்கிய ஆர்வலர்கள், புத்தக வெளியீட்டிற்கும், குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் சிறுவர் திரைப்பட விழாவிற்கும் வருகை புரிய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்).

Comments are closed.