வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

எந்த அடிப்படையில் எனக்கு இப்படிக் கடிதங்கள் வருகின்றன என்று தெரியவில்லை.  தினமும் ஒரு ஐந்து பேராவது தங்கள் பயோடேட்டாவை அனுப்பி வைத்து மணி ரத்னத்திடம், கமல்ஹாஸனிடம் உதவி இயக்குனராக என்னைச் சேர்த்து விடுவீர்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்குப் போக வேண்டிய கடிதங்கள் விலாஸம் மாறி எனக்கு வந்து விடுகின்றனவா என்ன?  நானே இப்போதுதான் வசன கர்த்தா ஆகலாம் என்று முடிவு செய்து இயக்குனர் பாலாவிலிருந்து பாலாஜி சக்திவேல் வரை என்னுடைய பயோடேட்டாவை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். (ஆமாம், வசந்த பாலனுக்கும் அனுப்பி இருக்கிறேன்!) இதற்கிடையில் என்னிடமே சிபாரிசு கேட்டு கடிதமா?

ஆமாம், ஒரு சந்தேகம்…  வசன கர்த்தா ஆவதற்கு வயது வரம்பு இல்லை தானே?

இந்த நிலையில் பின் கண்டுள்ள கடிதத்தைப் போல் தினம் ஐந்தாறு கடிதங்கள் வந்து என்னை அச்சுறுத்துகின்றன.  யாரிடம் புகார் சொல்வது என்று தெரியவில்லை.  இதோ அந்தக் கடிதம்:

good evening sir, i’m Murali,20 yrs old. you are one of my
favourite writers. you are one of the persons, who introduced the
world literature to me.i have redad your books such aS OORIN MIGA
AZHAGAANA PEN,EXILE,RAASA LEELA,OZHUKINMAYIN VERIYAATAM etc., I have
interests both in arts and science
field, i want to be a versatile personality as leonardo davinci,
that’s why i want some advice from you in the fields of film making,
music, literature (fiction and non fiction novels, short story and
drama), arts (painting, cinema,) and science.my perspective is
broadened in structure.i want to be a successful personality.iam
waiting for your advice and lists of names of books and  film names
that you reccomend to me.thank you.

***

சரி, யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.  நானும் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறேன்.

நன்றி.

Comments are closed.