நித்யானந்தா: கபட வேடதாரியின் கலைந்த முகம்

டியர் சாரு,

நான் தங்களிடம் எனக்கு தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

ஒரு யோகி அல்லது குரு வழிகாட்டிதானே தவிர அவருக்கும் சில கர்ம வினைகளை அனுபவித்துதான் கடக்க வேண்டும். ரமணருக்கு புற்று நோய் வந்தது போல. அவரது செயல்கள் அதன் வெளிபாடுகளாக அமைகின்றன. அதனால் அவர் யோகி இல்லை என்று கூறி விட முடியாது. கோரக்கர் முதல் பல சித்தர்கள் சறுக்கி அதன் பின் எழுந்து இருக்கிறார்கள்.

நித்யாவும் ஒரு யோகிதான். அவர் மூலம் நாம் பெற்ற பயிற்சிகள் மற்றும் அடைந்த நன்மைகளை பார்க்க வேண்டும். நமக்கு ஒத்து வரகூடியவற்றை எடுத்து கொண்டு மற்றதை விட வேண்டும். நித்யாவின் மீது வைத்த மன பிம்பம் உடைந்தது ஒருவேளை நமது spritual path க்கு மிகவும் நன்மை செய்வதாக  இருக்கும். நீங்கள் “Kill the buddha when u meet him on the path ” பற்றி கேள்வி பட்டு இருப்பிர்கள் தானே.

ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி.

Regards,

S.N.Ramakrishnan

But I need to a explanation from you. If you don’t have any explanation, please stop writing about this bullshit since you have already have bad experience with people like Nithyanantha.

I deserve a reply from you since I spend time as well as money in Nithya after reading your blog. என்று ஒரு வாசகர் எனக்கு எழுதியிருந்தார்.  அதற்கு என்னுடைய உடைந்த ஆங்கிலத்தில் எழுதிய பதில்:

i request you not to read my writings.  i am writing for 20 hours a day daily .  and i get a bullshit from my readers.  i starve for my food.  who is paying for me.  everything here in my site is a free fuck.  pl dont read this site.

Hi Charu,

I have already written an email to you. I don’t want to take your precious time by sending junk emails.    I decided to write my second  email to convey a message to you.

The message is as your true readers (not followers, because you taught us to read and think , not to follow) ,  we are searching god inside us as you said in your writings. The external controversies and its repercussions, like issues of Usman siddhar and Nithayananda , won’t transform or mislead that searching process.You don’t  have to feel sorry about any scandals.

இந்த சம்பவத்தையும், தங்களையும் நினைக்கும் போதெல்லாம் ,   Aftermath of a lengthy  Rejection slip சிறுகதை  நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. அந்த கதையில் வரும் bukowsky ஐயும் தங்களையும் ஒன்றாகவே  பார்கிறேன்.  நீங்கள் உண்மையை கண்டறிந்து சொல்லும்  ஞானியோ அல்லது விஞ்ஞானியோ அல்லர் என்பதை தங்கள் வாசகர்களாகிய நாங்கள் அறிவோம். தாங்கள் ஒரு  எழுத்தாளன், உன்மத நிலையில் இருப்பவர் என்பதையும் அறிவோம்.

Please excuse me or correct me, if I differ with your opinion on this.

நன்றி.

மோகனசந்திரன்,

மும்பை.

Charu,

I am sure by now ur mail box must have been inundated with all types of mails about the ‘Sun News Expose’ of Nithyananda.understandable but i suggest you maintain some much needed equanimity.dont react emotionally at the spur of this moment.Probably ur regular remarks of ” i am some body very easy for people to take a ride” and ” even peace loving Vallalar would become violent with me and my friendship would be ruined with all good souls too” has become partially true.It is not your fault, at least this time 100%.

What had happened was something that was waiting to happen, considering the youth of Nithya.the guy is bubbling with so much energy and may be at the peak of his manly vigour. he works so hard for about 16 hours a day and might have fallen for the bodily pleasures offered by some attractive women. Even great kingdoms have fallen due to the whims and fancies of Women and certainly this proves that Nithya is after all a mere mortal and not a ‘God”.

I consider/considered him purely as a gifted Yoga Master.i was looking forward to meeting him and learn one particular Yoga from him, even if it means i have to pay some donation/fee. since i am settled in Bangalore for the past 10 years, i was thinking of riding on my bike on some weekend and learn the one yoga you mentioned which brings deep sleep quickly. I have been suffering from lack of sleep right from my college hostel days and at 40, i am fit despite a slipped disc, but spend time on web, watch News channels/sports and get disturbed sleep for a few hours every night.My interest in visiting his Bidadi ashram was/is purely to get a relief for that alone.

I could not bring myself in to treating him as a ‘god’, he might have other ‘gifts’, other than an experienced Yoga master, but likening him to ‘God’ was a bit stretching it too far. it is easy to say this in hindsight but that had been my opinion of him for long.

I am not going to blame Raga sudha or any attractive females for this fiasco. I am sure she would not have been the first for him and certainly not the last.If we accept that most men( 99.99%) are susceptible for this particular weakness, then we would not be so upset.

I remember reading a remark of Late writer Sujatha in a magazine some where, he had mentioned something very close to this- “when it comes to adultery, 99% men arfe ready with a hand on the zip”, or something close to that. So, i am surprised about this violent reaction and i do wnder whether these guys are hypocrites.

We have a different set of rules for ourselves and set a very high benchmark for our Heroes.
Individual self discipline is not easy to follow.one may not succeed in restraining in such situations when some women who adore you and respect you voluntarily offer to massage you to clear head ache and then all resistances may dissolve when the act breaks the barrier. after the first time, the mind would get corrupted and involuntarily seek such pleasure and may overpower the individual. absolute power corrupts absolutely!!!

I am not disappointed but i am only worried that i may not be able to learn the Yoga from Nitya after this, if he winds up his ashram now.

it may have been a bigger shock for you because as usual u were deeply taken by his acts and considered him as ‘Living God”.so, it may take time for you to recover and in fact to some extent you would be justified if you feel he had betrayed your enormous trust and conviction. but i am also sure that , this is not the first time and may i add, the last time for you!

you need not apologise to your genuine readers for publicising Nithya among us. i think those of us who have been following up your writings , do take your appreciation of Nithya or for that matter everything with a pinch of salt. this may shatter a few who are die -hard fan(atic)s of Charu. But for some one who accepted Charu with all his limitations, habits and self confessed weaknesses, This does not come as a surprise.

This too shall pass, so, just chill out and relax Boss,

Best Regards
Rajan

Charu:

I disagree with Rajan completely. This guy (Nithyananda) called himself as Swami in the Kalpatharu program and claimed many times he is an enlightened being. True enlightened being are supposed to transcend everything as they don’t see difference between men and women. Hence, they should transcend flesh and sex, So, this guy as indeed betrayed the trust of millions as he made his millions by declaring himself as god. Had he been with family and declared himself an enlightened being (ex: Buddha), I would been OK but he did not.

If one needed a yoga teacher, they can go to many yoga teachers who are around the corner of the street. Baba Ramdev is a yoga teacher and he does not claim to be an enlightened being. So, godman like Nithyananda should be put behind bars and all his wealth should be confisticated!

மணிவண்ணன்,

நீலாங்கரை.

இப்போது நீங்கள் உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வீர்கள்?  அந்த விடியோ இட்டுக்கட்டி உருவாக்கப்பட்டது என்று சொல்வீர்களோ?

ஒரு வாசகர்.

என் பதில்:

நான் எதற்கு என் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும்.  எந்த அயோக்கியனாவது எதையாவது செய்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?  விடியோ பொய் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது.  நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்?  ஒரு அயோக்கியனை நம்பியதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

இப்போது நாம் பிரச்சினைக்குள் செல்வோம்.  நேற்று இரவு ஹமீது போன் செய்து விஷயத்தைக் கூறினார்.  அப்போது மன்ஹாட்டன் பாரில் விவேக் நாராயணன் என்ற ஆங்கில எழுத்தாளருடன் தில்லியில் நடக்க இருக்கும் சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்கு பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன்.  பிறகு வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்த போது விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.  ஆம், விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.  அதிர்ச்சி அடையவில்லை.  ஒரு நிறுவனத்தில் இருக்கும் எல்லா விதமான பிரச்சினைகளும், ஊழல்களும் நித்யானந்தரின் ஆசிரமத்திலும் உண்டு என்பது என் கவனத்துக்கு வந்தது.  அதன் காரணமாக, நான் ஆசிரமத்திலிருந்து விலகியே இருக்க விரும்பினேன்; இருந்தேன். ஆனால் நித்யானந்தரின் அளப்பரிய வித்யாஞானத்தால் அவரோடு மட்டும் அவ்வப்போது உரையாடி வந்தேன்.

மேலும், நித்யானந்தரின் பக்த கோடிகள் அனைவருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல் அவர் பின்னே திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எது பற்றியும் சுயமான  சிந்தனையே இல்லை.  நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள்.  பல லட்சக்கணக்கான அவருடைய பக்த கோடிகளுக்காக நித்யானந்தர் ஒருவரே சிந்தித்தார்.  அவரது சீடர்களில் பலருக்கு ஆச்சாரியார் என்ற பயிற்சி அளிக்கப்பட்டது.  அவர்களுக்குத்  துறவறம் ஒரு அவசியத் தகுதியாக வைக்கப்படவில்லை. அந்த ஆச்சாரியார்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்.  அந்த ஆச்சாரியார்களின் உரைகள் அவ்வளவும் பேத்தலாக இருந்தன.  அதனால் அந்த ஆச்சாரியார்களின் பக்கமே நான் திரும்பிப் பார்க்காமல் இருந்தேன்.  உதாரணமாக, ஒரு பெண் ஆச்சாரியார் உலகம் முழுவதுமே மங்களமாக உள்ளது என்று லெக்சர் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அபத்தக் களஞ்சியமாக இருந்ததால் நான் எழுந்து வெளியே போய் விட்டேன்.  பிறகு அந்தப் பெண் என்னை சந்தித்த போதும் அதையே உளறிய போது “அப்படியானால் கும்பகோணத்தில் ஒரு குடிசைப் பள்ளிக்கூடம் எரிந்து 90 குழந்தைகள் எரிந்து போனார்களே, அதுவும் மங்களமா?என்று கேட்டேன்.  ஆமாம் என்று மேலும் உளறினார் அந்தப் பெண்.

மேலும், நித்யானந்தரின் ஆன்மீகம் முழுமையாகவே இந்து மத சம்பிரதாயங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை.  உதாரணமாக, நித்யானந்தரின் வழிமுறையில்  ‘சொஸ்தப்படுத்துபவர்கள்என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் எடுத்து ஹீலராக ஆகி விடலாம். நித்யானந்தரின் மேல் மிகுந்த பற்றுக் கொண்ட என்னையும் ஹீலராக ஆகச் சொல்லி பலரும் கேட்டனர்.  நிர்மலாவும் (முன்னாள் ராக சுதா) பலமுறை என்னிடம் இதுபற்றிக் கேட்டார்.  அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தப் பயிற்சியை எடுத்தால் நீங்கள் சைவ உணவுக்காரராக மாற வேண்டும்.  மது அருந்தக் கூடாது.  அப்போது நான் நிர்மலாவிடம் சொன்னேன்: நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன்.  என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது.

மேலும், பல முன்னாள் நீலப்பட நடிகைகள் வெள்ளை ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரமத்தில் வலம் வந்து கொண்டிருந்தனர்.  அது எனக்கு ஒருவித அசூயையை அளித்தது.  நாம் என்ன வேண்டுமானாலும் அயோக்கியத்தனம் செய்து பணம் சம்பாதித்து விட்டு நம்முடய குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள ஒரு சாமியாரைப் பிடித்துக் கொண்டால் போதுமா?  இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் என்னை நித்யானந்தரிடமிருந்து ஒதுங்கச் செய்து கொண்டிருந்தன.

என்னுடைய ஆங்கிலச் சிறுகதையில் இது பற்றிய என் மன வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.  வாசகர்கள் யாரும் படித்துப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை.

இப்போது இந்த செக்ஸ் பிரச்சினை.  இந்த விடியோக்கள் எதுவும் பொய்யாகத் தெரியவில்லை.  அப்படி இருந்திருந்தால் இத்துறையில் வல்லுநர்களாக இருப்பவர்கள் இந்நேரம் எளிதில் கண்டு பிடித்துச் சொல்லியிருப்பார்கள்.  இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடையவில்லை.  ஆச்சரியப்படவில்லை.  காவி கட்டியவர்கள் செய்யும் கயவாளித்தனங்களை நாம் பார்ப்பது இதுவா முதல் தடவை?  நான் திருவண்ணாமலை சித்தரிடம் ஏமாந்த போதே பல வாசகர்கள் நித்யானந்தரைப் பற்றி எச்சரித்து, இவர் பற்றியும் உங்களுடைய (வசை) கட்டுரையை  எதிர்பார்க்கிறோம் என்று சொன்னார்கள்.  அவர்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும்.  ஆனால் இனிமேல் ஏமாற மாட்டேன்.  ஏனென்றால், இனிமேல் சாமியார், சித்தர் என்று யார் பின்னாலும் செல்ல மாட்டேன்.

பல வாசகர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.  அவர்களையெல்லாம் மனசுக்குள் நன்றாகத் திட்டினேன்.  அவர்கள் ஆறுதல் சொல்லும் அளவுக்கு எனக்கு என்ன சோகம் நடந்தது?  எந்தக் கயவாளிப்பயலோ எவள் குண்டியையோ நக்கினால் எனக்கு என்ன?  ஆனால் அந்தக் கயவாளியை நான் நம்பி விட்டேன்.  என்னால் பல ஆயிரம் பேர் நம்பி விட்டார்கள்.  சரி, கபட சந்நியாசி என்று தெரிந்து விட்டது.  தூக்கிப் போட்டு விட்டேன்.  எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  இவ்வளவு ஏமாந்தும் இன்னமும் ஏமாளியாக இருக்கிறோமே என்ற சுய பச்சாதாபம் மட்டுமே கொஞ்சமாய் மனதில் தோன்றுகிறது.

ஒரு வாசகர் அழுதார்.  கோபப்பட்டார்.  நடிகையின் பெயரைச் சொல்லி அவள் அவனுக்கு ப்ளோ ஜாப் செய்கிறாள் சாரு; இவனை ஜெயிலில் போட வேண்டும்என்று ஆவேசப்பட்டார்.  இந்தக் காரணத்துக்காக ஒருவரை ஜெயிலில் போட வேண்டும் என்றால் நம் வாழ்நாள் முழுவதையும் ஜெயிலில்தான் கழிக்க வேண்டும் என்றேன்.  விஷயம் என்னவென்றால், அவர் காவியைக் கட்டிக் கொண்டு அந்த வேலையைச் செய்கிறார்.  நாம் வெள்ளை வேஷ்டியைக் கட்டிக் கொண்டு செய்கிறோம்.

நித்யானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி என்றும், ஞானி என்றும், இந்திய ஞான மரபில் வந்தவர் என்றும், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றவர்களின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டார்.  இப்படிச் சொல்லி லட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்து அவர்களை ஏமாற்றினார்.  அவரை நம்பி பல இளம் பெண்கள் சந்நியாச வாழ்வை மேற்கொண்டனர்.  ஒரு பத்திரிகை அதிபரிடம் நான் நித்யானந்தரின் அருமை பெருமை பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.  அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள்.  அவர்களின் ஒரே செல்ல மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே நித்யானந்தரின் ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்து விட்டாள்.  அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது.

போகட்டும் என்கிறார் நித்யானந்தர்.  புத்தர் துறவியாகவில்லையா என்று கேட்கிறார்.  புத்தர் என்ன நடிகைகளின் குண்டியையா நக்கினார் என்று இப்போது எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.

எனக்கும் ஒருமுறை இதுபோல் நடந்தது.  நான் வைரஸ் ஜுரம் வந்து தனியாக, அநாதையாக என் வீட்டில் படுத்துக் கிடந்த போது என் மனைவி நித்யானந்தரின் ஆசிரமத்தில் இருந்தாள்.  அப்போது ஆசிரமத்துக்குத் தகவல் அனுப்பிய போது “ஐயாவுக்கு சரியாகி விடும்என்று ‘சாமிசொன்னதாக செய்தி வந்தது. அப்போதே துணுக்குற்றேன்.  படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளவே முடியாத என்னை ஹமீது தான் ஆள் அனுப்பி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி என்னைக் காப்பாற்றினார். ஒரு வாசகி எனக்கு கஞ்சி அனுப்புவார்.  அந்தக் கஞ்சிப் பாத்திரத்தைத் திறக்கத் தெம்பு இல்லாமல் ஒருநாள் அரை மணி நேரம் போராடினேன்.  இப்படித் தொடர்ந்து பிரச்சினைகளாகவே இருந்ததால் நித்யானந்தரிடமிருந்து சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தேன்.  அவருடைய நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து என்னை டிசம்பரிலேயே விடுவித்துக் கொண்டேன்.  அதற்குப் பிறகும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதை நிறுத்தினேன்.

நித்யானந்தரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாக  இலக்கியத்தில்  மாமா  வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார்.  ஒரு லட்சம் கொடுத்தாலே சினிமாக்காரனின் குண்டியை நக்கத் தயாராக இருக்கும் இவர்களைப் போன்றவன் நான் அல்ல.  நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன்.  இன்னமும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவு எனக்கு 4000 ரூ . பாக்கி.  அவருடைய எழுத்தை டைப் செய்து கொடுக்கும் டைப்பிஸ்ட் என்னை வந்து பணம் கேட்ட போது ஆசிரமத்தின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘நீங்கள் கொடுத்து விடுங்கள்; நாங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்என்று சொன்னதால் கொடுத்தேன்.  இன்னமும் அந்தப் பணம் வந்து சேரவில்லை.

ஒருவரை ஏமாற்றினாலே சிறைத் தண்டனை உண்டு.  ஆனால் இந்தக் கபட சாமியார் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஒருவருடைய அந்தரங்கமான விஷயம். அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை.  ஆனால் நித்யானந்தர் மிக உயரிய ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி விட்டு இப்படி ப்ளோ ஜாப் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்.   மற்ற எல்லா விஷயங்களிலும் ஓஷோவின் சிந்தனைகளையே தன்னுடையதாக எடுத்துக் கொண்ட இந்த நித்யானந்தர் ஓஷோவின் செக்ஸ் வாழ்க்கையை ஏன் விட்டு விட்டு அதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டார்?  பிரேமானந்தரிலிருந்து தமிழ்நாட்டு சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?

இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள்.  அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள்.  நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.   தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார்.  அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது.  அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான்.  ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

ஆனால் அவருடைய ஆசிரமத்தில் இருப்பவர்கள் அனைவரும் மந்திரித்து விட்ட ஆடுகள்.  ஊடகங்களில் ‘சாமியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் போட்டு சாமிக்கு சோதனை கொடுத்துக் கொண்டிருப்பதாக அழுது கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் அழுது கொண்டிருக்கும் போது நித்யானந்தரின் தனியறையில் ஏதாவது ஒரு நடிகை அவருடைய ஆண்குறியை சுவைத்துக் கொண்டிருக்கலாம்.

Comments are closed.

Log In

Forgotten Password
Cancel

Archives

Calendar

July 2010
S M T W T F S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Who's Online

31 visitors online now
31 guests, 0 members