விராத் கோலியின் தோழி

இன்று மதியம் உணவுக்காக நண்பர்களை சந்தித்தேன்.  கோபால், கணேஷ், கருப்பசாமி, அராத்து.  விராத் கோலி மட்டையைப் பிடித்து ஆடிக் கொண்டிருந்தார்.  அவன் முகத்தைப் பாருங்க சாரு, இவன் சீக்கிரம் அவுட் ஆய்டுவான் என்றார் அராத்து.  அவன் என்று அவர் குறிப்பிட்டது கோலியை.  அவர் சொன்னது சரிதான்.  அவர் முகம் வாடியிருந்தது.  முழங்காலைக் கூடப் பாருங்கள்.  சரியா நிக்க முடியாம துவள்றான்.  சீக்கிரம் அவுட் ஆய்டுவான்.  அராத்து.  ”ஏன் இப்படி சொல்கிறீர்கள்?” என்றேன்.  அப்போது கேமரா பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பேரழகியைக் காண்பித்தது.  பாருங்க, பாருங்க, இவ தான் காரணம், இவ தான் காரணம் என்று பதற்றத்துடன் கத்தினார் அராத்து.  யார் இவுங்க, எதுக்கு இவுங்க காரணம் என்றேன்.

”கோலி அவுட் ஆகப் போறான், இந்தப் பொண்ணுதான் காரணம்.  இவ பேரு அனுஷ்கா.  கோலியோட கேர்ள் ஃப்ரெண்ட்.”

“அனுஷ்கா ரொம்ப குண்டால்ல இருப்பாங்க?”

“இவ வேற.  இந்த அனுஷ்கா நார்த் இண்டியன்.”

“சரி, இவங்களால ஏன் கோலி அவுட் ஆவார்?”

“ஒரு மாசமா கோலி ஆஸ்ட்ரேலியாவுல இருக்கான்.  கேர்ள் ஃப்ரெண்டைப் பிரிஞ்சு தனியா இருக்கான். நேத்து நைட் தான் இவ ஆஸ்ட்ரேலியா போனா.  நேத்து நைட் பூரா அவன் தூங்கியா இருப்பான்?  கண்ணையும் முகத்தையும் பாருங்க…”

பேசிக் கொண்டிருக்கும் போதே ஒற்றை இலக்க ரன்னுடன் கோலி அவுட் ஆனார்.  ‘

இதை ஆச்சரியத்துடன் என் நண்பரிடம் சொன்னேன்.  அடப் போய்யா, அந்த அராத்து ஒரு வக்கிரம், அவர் பேச்சைக் கேட்கும் நீ ஒரு லூசு.  அந்தப் பெண்ணும் கோலியும் தனியாகத் தங்கவே முடியாது.  They have strict rules and regulations” என்றார்.

சொன்னவர் ஒரு பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபால்.  வயதானவர்.  எனக்கு ஒரே குழப்பம்.  இந்த பிரின்ஸிபாலின் பேச்சை நம்புவதா, அராத்து பேச்சை நம்புவதா?