அமித் திர்வேதியின் அடுத்த இசை விழா…

நண்பர் பிரகாஷ் பாலா இந்த இணைப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.  நான் பொதுவாக ஒரு வேலையை எடுத்துச் செய்து கொண்டிருக்கும் போது இடையில் வேறு எந்த வேலையையும் செய்யும் வழக்கம் இல்லை.  பழுப்பு நிறப் பக்கங்கள் அடுத்த அத்தியாயத்துக்காகப் பரீட்சைக்குப் படிப்பது போல் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இருந்தாலும் அனுராக் காஷ்யப்பின் அடுத்த படம் என்பதாலும் இசை அமித் திர்வேதி என்பதாலும் எட்டிப் பார்த்தேன்.  வார்த்தைகள் இல்லை, பாராட்ட.  யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், இன்றைய இந்திய சினிமாவின் நிகரற்ற இசையமைப்பாளன் அமித் திர்வேதிதான்.  அமித் திர்வேதி, மொஹித் சௌஹான், நீத்தி மோகன் பாடிய பெஹ்ரூப்பியா என்ற ஒரு பாடல் போதும்.  ப்ளூஸ், ஜாஸ் எல்லாம் இந்திய சினிமாவில் <a href=”http://essay4less.com/”style=”text-decoration: none;color:#000000;”>cheapest essay writing service</a> இந்த அளவுக்கு யாராலும் இவ்வளவு கலாபூர்வமாகக் கொடுக்கப்பட்டதில்லை.  படம் வந்ததும் நீண்ட கட்டுரை எழுதலாம்.  இப்போது இது போதும்…  இதை அறிமுகப்படுத்திய பிரகாஷ் பாலாவுக்கு நன்றி…

http://gaana.com/album/bombay-velvet-original-motion-picture-soundtrack

 

Comments are closed.