குலசாமியைக் கொன்றவன்

சல்மான் கான் பற்றிய செய்திகளைப் படிப்பதற்காக தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.  மற்றபடி தினசரிகளையோ வாராந்தரிகளையோ படிப்பதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.  எல்லா நேரத்தையும் புத்தக வாசிப்பே எடுத்துக் கொண்டு விடுகிறது. சல்மான் விஷயமாக தினசரிகள் பக்கம் போனபோது விகடன் கண்ணில் பட்டது.  எடுத்துப் புரட்டிய போது கணேச குமாரன் எழுதிய சிறுகதை குலசாமியைக் கொன்றவன்.  எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்பதால் படித்தேன்.  கதை உலகத் தரம்.  இப்படி ஒரு சிறுகதை படித்து நீண்ட காலம் ஆகிறது.  இந்த வார விகடனில் வந்துள்ளது.  கணேச குமாரனுக்கு என் வாழ்த்துக்கள்.

Comments are closed.