மலேஷிய பயணம் (2)

இது அராத்துவுக்கு:  என்னுடைய/நம்முடைய மலேஷியப் பயணம் பற்றி முகநூலில்/சாரு ஆன்லைனில் பதிவதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று ஏற்கனவே யூகித்தேன்.   ஒருவருமே எதிர்வினை புரிய மாட்டார்கள். காமெண்ட் பாக்ஸில் இதுவரை இரு தோழர்கள் பான் வாயேஜும் ஒரு தோழி ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் நாம் மலேஷிய மண்ணில் கால் வைத்ததும், அடடா, தெரியாமல் போயிற்றே, எனக்கு ஜேபியில் ஒரு செவென் ஸ்டார் ஹொடேல் இருக்கு, அங்கே ஒரு பத்து நாள் தங்க வைத்திருப்பேனே என்று சொல்லக் கூடிய நண்பரை கேஎல் ஏர்போர்ட்டிலேயே நாம் சந்திக்கலாம்.  அதில் சந்தேகமே வேண்டாம்.  சிங்கப்பூர் கூட வேண்டாம் என்று தோன்றுகிறது அராத்து.   சிங்கப்பூருக்கு பதிலாக நான் உங்களுக்கு ஒருநாள் நம் எக்ஸ்பிரஸ் அவென்யூவைச் சுற்றிக் காண்பிக்கிறேன். மலேஷியாவில் திருமண வைபவம் முடிந்ததும் நான்கு நாள் அல்லது ஐந்து நாள் கம்போடியா போவோம். இன்னொரு முக்கிய தோழியும் வருவதாக இருக்கிறார். நைஜீரியாவிலிருந்து நேராக வந்து நம்மோடு சேர்ந்து கொள்வார். மூன்று பேர் போதும். வேறு எதுவும் வேண்டாம். காலை எட்டரைக்கெல்லாம் வெளியே கிளம்பி விட வேண்டும். அந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்கு மட்டும் நீங்கள் இருவரும் ஒத்துழைத்தால் போதும்.

Comments are closed.