மியாட் மருத்துவமனைச் சாவுகள்!

மியாட் மருத்துவமனையில் நடந்தது தனியார் மருத்துவமனைகளின் மனிதாபிமானமற்ற வியாபாரப் போக்குக்கு ஒரு உதாரணம். தங்கள் மருத்துவமனையின் விளம்பரத்துக்காகக் கோடி கோடியாய் செலவு செய்யும் அதன் உரிமையாளர் கொஞ்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி வைத்திருக்கக் கூடாதா? மேலும், ஐசியூ போன்ற வார்டுகளை தரைத் தளத்திலா வைப்பார்கள்? அந்த மருத்துவமனையின் அஜாக்கிரதையினால் 18 நோயாளிகள் இறந்துள்ளனர். இயற்கைப் பேரிடர் அல்ல; வெறும் அஜாக்கிரதை. இவ்வளவுக்கும் மியாட்டின் விளம்பர சினிமா வராத சினிமா கொட்டகையே கிடையாது. அந்த ஆடம்பர விளம்பரத்தைப் பார்த்தால் நமக்கே ஒருமுறை போய் அங்கே அட்மிட் ஆக வேண்டும் என்று தோன்றும். கலி முத்திப் போச்சு!!! மருத்துவமனைகளே கொலைக்கூடங்களாகி விட்டன.