சென்ற பதிவில் ஒரு விஷயம் விடுபட்டு விட்டது. இந்தப் பேரிடர் மனிதரிடையே இருந்த மத வித்தியாசத்தைக் கூட அகற்றி விட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அங்கே வசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் இதுவரை சென்றிருக்க வாய்ப்பில்லை. இப்போது அந்தக் கோவிலில் அவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று அண்டாக்களில் சமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். இதைத்தான் மக்கள் இயக்கம் என்றேன். இதையும் சென்ற பதிவோடு சேர்த்து வாசிக்கவும்.