கும்கி

இன்று நண்பர் கார்த்திக்குடன் கும்கி போனேன். படம் பிடிக்கவில்லை. மைனா அளவுக்கு இல்லை. இமான் தான் போட்டு சாகடித்து விட்டார். இமானை கொஞ்சம் டீ குடிக்க வெளியே அனுப்பி இருந்தால் கூட படம் பிழைத்து இருக்கும். பொறுமைசாலிகள் ஒருமுறை பார்க்கலாம். நீதானே என் பொன் வசந்தம் சாய்ந்து சாய்ந்து கேட்டேன். எனக்குப் பிடித்த யுவனின் குரலாக இருந்தும் கூட பாடல் பிடிக்கவில்லை. யுவன் இப்படியெல்லாம் த்ராபை ம்யூஸிக் போட மாட்டாரே, இவருக்கு என்ன ஆயிற்று என்று இசையமைப்பாளர் பெயரைப் பார்த்தேன். விளங்கி விட்டது.

வரும் ஞாயிறு காலை பத்தரை மணிக்கு வின் டிவியில் கும்கி பற்றிப் பேசுவேன்.

Comments are closed.