வாருங்கள்…

நண்பர்கள் அனைவரையும் டிஸம்பர் 18 அன்று மஹாபலிபுரத்துக்கு அழைக்கிறேன்.  இதைத் தனிப்பட்ட அழைப்பாகக் கொள்ளவும்.  உங்கள் அனைவரோடும் சாவகாசமாக உரையாட வேண்டும் என்பதே என் அவா.  இந்த ஆண்டு எனக்கு ஒரு சிறப்பான ஆண்டு.  என்னுடைய ஏதேனும் ஒரு நாவல் இந்தப் பதினெட்டாம் தேதிக்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றால் 18-ஆம் தேதி தற்கொலை செய்து கொள்வேன் என்று எழுதியிருந்தேன்.  இரண்டு புத்தகங்கள் தயாராகி ஒரு புத்தகம் வெளிவந்தும் விட்டது.  morgue keeper அமேஸான் கிண்டிலில்.  இன்னொன்று, தேகம் நாவலின் மொழிபெயர்ப்பு.  corpus.   சர்வதேச அளவில் பிரபலமான நம்பர் ஒன் பப்ளிஷர் அதைப் பிரசுரிக்கிறார்கள்.  தமிழிலும் ஜனவரியில் என்னுடைய 4 புத்தகங்கள் வெளி வர உள்ளன.  இதையெல்லாம் கொண்டாட வேண்டும்.  வர விரும்புகின்றவர்கள் துரோகி அல்லது செல்வகுமாரைத்  தொடர்பு கொள்ளவும்.  99419 59211 & 94440 37663

Comments are closed.