பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 4)

இந்த அவசர உலகத்தில், இந்த சினிமா உலகத்தில் ஒரு சினிமா விமரிசனம் எழுதினால் உடனடியாக இருபதாயிரம் பேர் படித்து விடுகிறார்கள். அதில் நூறு பேர் எதிர்வினையும் செய்கிறார்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களைப் படிக்கிறார்களா, படித்துவிட்டு அது பற்றிச் சிந்திக்கிறார்களா என்று அவ்வப்போது யோசிப்பேன். ஆனால் ஒரு கர்ம யோகிக்கு அப்படியெல்லாம் யோசனை வரலாகாது. முன்னோடிகளுக்குச் செய்யும் ஒரு யக்ஞம் இது.

இந்த நிலையில் சென்ற வாரம் எஸ். வைதீஸ்வரனிடமிருந்து ஒரு கடிதம்:

அன்புள்ள சாரு…

இந்த வாரம் தினமணியில் ‘கு.ப.ரா. 3’ படித்தேன். குபராவைப் பற்றி இதுவரை கவனிக்கப்படாத அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட பல ஆழமான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. வெறும் அதிர்ச்சிகளைத் தூண்டும் அதீத உறவுகளைப் பற்றி எழுதும் சிறுகதை ஆசிரியரைப் போல் ஒரு பிம்பத்தை யாரோ தவறாக ஆவணப்படுத்திவிட்டார்கள். இலக்கியம் பற்றிய விசாலமான பார்வையும் படிப்பும் சிந்தனையும் கொண்ட ஒரு பிரக்ஞையுள்ள கலைஞனை உங்கள் கட்டுரை மூலம் கண்டறிகிறேன்.

இத்தகைய தகவல்கள் மிக அடிப்படையாக ஒரு இலக்கிய வாசகனுக்கும் பின்வரும் தலைமுறைகளுக்கும் உபயோகப்படும். ஒரு கவிஞனின் ஏதாவது ஒரு கவிதை அம்சத்தை மட்டும் ‘மேய்ந்து விட்டு’ அவனுக்கு அதையே ஓர் அடையாள முத்திரையாக செய்துவிடுகிற அசிரத்தையான மதிப்பீடுகள் இன்றும் நேருகின்றன. கு.ப.ரா அன்றே இதை ஊகித்து சுட்டிக் காட்டியிருக்கிறார். உங்கள் ஊக்கமான இந்த இலக்கியப் பணி தொடரட்டும்.

அன்புடன்,
எஸ். வைதீஸ்வரன்.
27.6.2016.

மேலும் படிக்க: http://bit.ly/29gd2bA