சென்னையில் நல்ல உணவு ஏன் இல்லை?

பிரபாகரன் உணவக உரிமையாளர் முத்துராமலிங்கம் அந்திமழை கட்டுரைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“நல்ல சோறு என்று பாராட்டிய சாரு ஐயாவுக்கு நன்றி. ஆனா வடபழனியை கே.கே. நகர்ன்னு ஏரியா மாத்திப்போட்டுட்டீங்களே சார்….”

https://www.facebook.com/muthu.ramalingam.7/posts/1113622118707349

***

என். சொக்கனும் அந்திமழை கட்டுரையைப் பாராட்டியிருக்கிறார்.   இருவருக்கும் நன்றி.  வடபழனியை கே.கே. நகர் என்று எழுதியது தவறுதான்.  டிஸ்கவரி புக் பேலஸுக்கு வரும் போதெல்லாம் பிரபாகரன் மெஸ்ஸுக்குப் போவதால் அதையும் கே.கே. நகர் என்று நினைத்து விட்டேன்.  கீழே என். சொக்கன் குறிப்பு:

“இந்தமாத ‘அந்திமழை’ இதழில் சாரு நிவேதிதா எழுதியிருக்கும் ‘ஏன் சென்னையில்மட்டும் ஒரு நல்ல சாப்பாட்டுக்கடை இல்லை?’ கட்டுரை அபாரம்! இணையத்தில் இருக்கிறதா என்று தெரியாது, தேடிப்படியுங்கள்.”

https://www.facebook.com/nchokkan/posts/10154240694893292

மேற்கு சென்னைவாசிகள் பிரபாகரன் மெஸ்ஸைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  அபாரமாக இருக்கிறது.

***