சிலே

மார்ச் 10 இலிருந்து 17 வரை Valparaiso நகரில் இருப்பேன்.  பாப்லோ நெரூதாவின் ஊர்.  ஸந்த்தியாகோவும் பயணத் திட்டத்தில் உண்டு.  யாரேனும் நண்பர்கள் சிலேயில் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.  அல்லது, உங்கள் நண்பர்கள் இருந்தாலும் அறிமுகப்படுத்தலாம்.   மலேஷிய நண்பர் முஸ்தஃபாவுடன் தான் செல்வதால் நல்ல வசதியான ஓட்டலில்தான் தங்குவேன்.  இருந்தாலும் சிலேவில் இருப்பவர்கள் தெரிந்தால் வால்பராய்ஸோவிலிருந்து ஃபால்க்லேண்ட் தீவுக்கு எப்படிச் செல்லலாம் என்பது போன்ற ஓரிரு விபரங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

இன்னொரு விஷயம்.  கோணல் பக்கங்களை நான் விகடன் தளத்தில் எழுதிக் கொண்டிருந்த போது பெரூவுக்கும் சிலேவுக்குமான பார்டரில் இருக்கும் tacna என்ற ஊரில் வசிக்கும் கிருஷ்ணராஜ் என்ற நண்பர் தொடர்பில் இருந்தார்.  அதற்குப் பிறகு ஏழெட்டு ஆண்டுகளாக தொடர்பில் இல்லை.  சொல்லப் போனால் அப்போது என்னோடு தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் இப்போது சுத்தமாக தொடர்பில் இல்லை.  அவர்கள் சாருஆன்லைனைப் படிக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை.  ஒருமுறை என்னுடைய ஹாட்மெயில் ஐடியை ஒரு சிங்கப்பூர் ஆசாமி ஹாக் செய்ததிலிருந்து அவர்களுடைய தொடர்பு விட்டுப் போயிற்று.  அவர்களின் மெயில் ஐடி கூட என்னிடம் இல்லை.  கிருஷ்ணராஜ் இதைப் படித்தால் தொடர்பு கொள்ளவும்.

charu.nivedita.india@gmail.com

Comments are closed.