நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி…

சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் தந்தி டிவி நடத்திய மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். முழுக்க முழுக்க ஒரு அரசியல் நிகழ்ச்சி. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் கோஷ்டிகள் பிரிந்து ஒரே வெப்பமாக இருந்த சூழல். என் பேச்சின் இடையே முன் வரிசையில் இருந்த பலர் சத்தம் போட்டு பேச்சை நிறுத்தி விட்டனர். இரண்டு நிமிடங்கள் கழித்தே பேச்சைத் தொடர முடிந்தது. நிகழ்ச்சி முடிந்தும் போலீஸ் பாதுகாப்புடன் தான் திரும்ப முடிந்தது.

நாளை மாலை ஆறு மணிக்கு பாண்டிச்சேரியில் மீண்டும் தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறேன். காரணம், ரஜினி-கமல் அரசியல் நுழைவு பற்றிய நிகழ்ச்சி. இது குறித்து மக்களிடம் என் கருத்து போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கிறேன். சினிமா நடிகர்கள் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து எம்மெல்லேவாக வருவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் முதல்மந்திரியாக வர நடிகர்களுக்குத் தகுதி இல்லை. ஏன் என்று நாளைய நிகழ்ச்சியில் சொல்கிறேன்.