Zero Degree Publishing

இலங்கையிலிருந்து நஃப்லா இப்படிக் கேட்டிருக்கிறார்: தங்களின் புத்தகங்களை இலங்கையில் எவ்வாறு பெறுவது? பல்கலைக்கழக நூலகத்தில் ராஸ லீலா, ஸீரோ டிகிரி உட்பட மொத்தமாக ஒரு ஐந்து புத்தகங்கள்தான் இருக்கிறது.  எல்லாம் வாசித்தாயிற்று.
இதனை உங்களிடமே கேட்பதற்கு மன்னிக்க லேண்டும்.

நஃப்லா, என் நண்பர்கள் காயத்ரியும் ராம்ஜி நரசிம்மனும் Zero Degree Publishing என்ற பதிப்பகத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் உள்ள பிரதானமான எல்லா எழுத்தாளர்களின் நூல்களும் காலக்கிரமத்தில் வந்து கொண்டிருக்கும். அதேபோல், முக்கியமான நூல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் விநியோகிக்கப்படும். தமிழ் நூல்கள் தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ZDP -இன் துவக்க விழா டிஸம்பர் இறுதியில் இருக்கும்.

இலங்கையிலிருந்தும் மலேஷியா, சிங்கப்பூரிலிருந்தும் பல வாசகர்கள் சமகாலத் தமிழ் நூல்களைக் கேட்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை.

காயத்ரி, ராம்ஜி ஆகியோரின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். என் குருநாதர்கள் ஷீர்டி பாபா மற்றும் மஹா அவ்தார் பாபாவின் அருளாசிகளும் அவர்களுக்குப் பூர்ணமாகக் கிட்டும்.