ஒரு உரையாடல்

ஷ்ருதி டிவி கபிலன் புத்தாண்டு தினத்தன்று யூட்யூபில் என்னுடைய நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்பினார்.  நானாகப் பேசினால் அஞ்சு நிமிடம் பேசுவேன்.  கேள்விகள் இருந்தால் எட்டு மணி நேரம் கூடப் பேசுவேன்.  முதல் கேள்விகளை மதுரை அருணாசலம் அனுப்பியிருக்கிறார்.  நீங்களும் அனுப்பலாம்.  கேள்விகள் இன்று இரவுக்குள் வர வேண்டும்.  நாளை காலை ஐந்து மணிக்கு ஒளிப்பதிவு உள்ளது.

டியர் சாரு,
1. முப்பது வருடங்களாக தொடர் வாசிப்பில் உள்ள எனக்கு, கடந்த 10 வருடங்களாக, பெரும்பாலான நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் மீது விருப்பம் குறைந்து வருகிறது. மொழி அழகியல் சார்ந்த அடர் கவிதைகள் மீதும், கட்டுரைகளின் மீதுமே ஆர்வமுள்ளது..

2. Non linear வகை வாசிப்பில் ஆர்வம் அதிகரித்தவுடன், Linear வகையில் வாசிப்பு மிகவும் bore ஆகவும் , ஏதோ நேரத்தை வீணடிக்கும் செயலாகவும் தோன்றுகிறது.. ஆனால் எவ்வளவு வாசித்தாலும், சங்க இலக்கியங்களின் மீது காதலே அதிகரிக்கிறது.. நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகள் வசீகரிக்கிறது..

3. நிலவியல், மானுடவியல், உளவியல் மற்றும் அறிவியல் சார்ந்த புதிய சிந்தனைகளத் தூண்டும் படைப்புகளில் மட்டுமே எனது கவனம் செல்கிறது..

ஓரு வாசகனுக்கு, இம்மாதிரியான ஒரு Fatigue state நல்லதா.. கெட்டதா..