silence and a melody of tears…

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கும் இந்தப் பாடல்களை என் கண்ணீருடன் சேர்த்து அனுப்பி வைக்கிறேன்.  கண்ணீர் துயரத்தின் வெளிப்பாடு என்று யார் சொன்னது?  இதில் வரும் இரண்டாவது இணைப்பில் உள்ள மெலடி ஆஃப் டியர்ஸை ஒரு ஐந்து நிமிடம் கேட்டுப் பாருங்கள்.  உங்கள் கண்கள் கலங்கவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள்.

***

உங்களுக்கு ஏதேனும் கவலை இருந்தால்  அதையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு கண்களை மூடியபடி காலை ஐந்து மணி அளவில் இந்த இசையைக் கேட்டுப் பாருங்கள்.  காலையில் முடியாவிட்டால் இரவு பதினோரு மணிக்கு மேல்…  கடவுள் உங்கள் அருகே வந்து கம்மென்று அமர்ந்திருப்பார்.  நேரம் காலம் இடம் எல்லாமே மறந்து எல்லாமே கடந்து போயிருப்பதை உணர்வீர்கள்.  ம்ம்ம்… உணர்வதற்குக் கூட உணர்வு இருக்குமோ தெரியவில்லை.  கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=YFD2PPAqNbw

மேலே உள்ள அமைதியை அடுத்து கண்ணீரின் மெலடி வருகிறது.

https://www.youtube.com/watch?v=bNsfqumtc9A

நேற்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.  நீங்கள் எப்படி இளமையாக இருக்கிறீர்கள் என்று.  இதோ இம்மாதிரி இசையை எந்நேரமும் கேட்டுக் கொண்டே இருப்பதால்தான்.