அராத்து : அத்தனைக்கும் ஆசைப்படு!

நீங்கள் ஏன் ட்விட்டரில் நுழைந்து ட்வீட்டுகளைப் போடக் கூடாது என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார் அராத்து.  எனக்கு அந்த ஆசை இல்லை என்பேன்.  ஏனென்றால், என் நாவலில் வரப் போகும் வாக்கியங்களை எடுத்து நான் ட்விட்டருக்கு தானமாக அளிக்கக் கூடாது.    இந்த நிலையில் அராத்து ட்விட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.  அவருடைய ட்வீட்டுகளையெல்லாம் ஏன் புத்தகமாகத் தொகுத்துப் போடக் கூடாது என்று அவரிடம் நான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன்.  அதன்படி இப்போது அராத்துவின் ட்வீட்டுகள் புத்தகமாக வர இருக்கிறது.  கிழக்கு பதிப்பகம் மூலம்.  அந்த ட்வீட்டுகளையெல்லாம் ஒருசேரப் படித்துப் பார்த்தேன்.  ரகளை, அமர்க்களம், அட்டகாசம்.  உதாரணத்துக்கு ஒரு ட்வீட்.

லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்தேன்.  சத்குரு சொன்னது சரிதான்.

அத்தனைக்கும் ஆசைப்படு.

Comments are closed.