ஆண்டாள் – திருவள்ளுவர்

வைரமுத்து ஆண்டாள் பற்றி ஏதோ சொன்னதாக ஒரே அல்லோலகல்லோலமாக இருக்கிறது. அவர் என்ன சொன்னார், எந்தப் பத்திரிகையில் அது வெளியாகி இருக்கிறது என்று யாரேனும் லிங்க் தர முடியுமா? நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் விவாதம் செய்ய என்னை அழைத்தார்கள். வைரமுத்து அப்படியெல்லாம் உளறி இருக்க மாட்டார் என்றே சொன்னேன். ஆனால் புகழ் முற்றி விட்டால் போதைதான். சினிமாக்காரர்களையே எப்போதும் துதிபாடிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் சமூகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாளைக்கு எந்தப் பாடலாசிரியராவது அல்லது இயக்குனராவது வந்து திருவள்ளுவர் பிராத்தல் நடத்திக் கொண்டிருந்தார் என்று சொல்லுவார். யார் கண்டது? சரி, வைரமுத்து அப்படிச் சொன்னாரா என்று இன்னமும் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. லிங்க் அனுப்புங்கள்.