வைரமுத்துவைக் கைது செய்யுங்கள்…

ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியிருப்பதைக் கேட்டேன். திட்டமிட்டுத்தான் பேசியிருக்கிறார். ஏனென்றால், அது பேச்சு அல்ல. எழுதிப் படிக்கிறார். யாரோ ஒரு முட்டாள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தாராம், ஆண்டாள் தாசி என்று. என்னடா என்று பார்த்தேன். கடவுளைக் காதலனாகக் கற்பித்துப் பாடியதால் தாசியாம். அட அறிவுக் கொழுந்துகளா… கடவுளைக் காதலனாக நினைத்துப் பாடுவது நாயக – நாயகி பாவம் என்பது கூடவா கவிப் பேரர்ஜவுக்குத் தெரியவில்லை? கடவுளைக் காதலனாக வரித்தால் தாசியா? அந்த அமெரிக்க ஆய்வாளரைப் பார்த்தால் அவர் முகத்தில் காறி உமிழுங்கள். மேலும், இதை மேற்காள் காட்டிப் பேசியிருக்கும் வைரமுத்துவைக் கைது செய்ய வேண்டும். இதற்குப் பெயர் எல்லாம் கருத்துச் சுதந்திரம் இல்லை. ஒரு ஞானியைத் தேவடியாள் என்று சொல்ல உனக்கு எவன் உரிமை கொடுத்தது? தாசி என்றால் என்னய்யா அர்த்தம்? ஆண்டாள் பெருமாளுக்குத் தன்னைக் கொடுத்தாள். தேவரடியார் என்ற பிரிவை ஏற்படுத்திய சமூகம் அவர்களைத் தங்கள் காம உணர்வுகளைத் தணித்துக் கொள்ளப் பயன்படுத்தியது. ஆண்டாள் அப்படி அல்ல. சரி, கவிப் பேரரஜு, biological ஆக தகப்பனார் யார் என்று தெரியாதவர்களை தாசி என்று சொல்லும் நீங்கள் இதே தர்க்கத்தை மற்றொரு தீர்க்கதரிசிக்கும் வைப்பீர்களா? அந்த தைரியம் உங்களுக்கு உண்டா? இப்படிக் கேட்பதால் என்னை இந்துத்துவா என்று சொல்லக் கூடாது. நான் இந்துத்துவாவைக் கடுமையாக எதிர்ப்பவன்.

ஆண்டாளை தாசி என்று சொன்னதன் மூலம் வைரமுத்து தமிழ்க் கவிஞர்களையும் தமிழையும் தமிழ்ச் சமூகத்தையும் அவமதித்து விட்டார். அவரைக் கைது செய்ய வேண்டும்…