வைரமுத்து – 2

ஒரு தொலைபேசி உரையாடலில் தேவதாசி என்பதற்கு உயர்ந்த அர்த்தம் இருந்ததாகவும் பின்னர் நிலவுடைமைச் சமுதாயத்தில்தான் அதற்கு இழிவான அர்த்தம் ஏற்பட்டு விட்டதாகவும் குறிப்பிடுகிறார் வைரமுத்து. சரி. நாம் இப்போது என்ன மன்னராட்சியிலா இருக்கிறோம்? ஜனநாயகம்தானே? மன்னர் ஆட்சியில் மன்னர் கடவுளுக்குச் சமம். மக்கள் அடிமைகள். அப்படிப்பட்ட மன்னராட்சி சொல்லாடலான கவிப் பேரரசு என்ற பட்டத்தை ஏன் அவர் சுமந்து கொண்டிருக்கிறார்?

2. எவரையும் ஜாதி சொல்லிக் குறிப்பிடக் கூடாது. திட்டக் கூடாது. சட்டப்படி குற்றம். அப்படி இருக்க, ஒருத்தரை பார்ப்பான் என்று சொல்கிறேன். அவர் கோவிக்கிறார். உடனே நான் திட்டவில்லை; உங்களைப் பாராட்டினேன் என்று சொல்ல முடியுமா? பார்ப்பு என்றால் இரு முறை பிறக்கும் உயிர். பட்சிகள் இருமுறை பிறக்கின்றன. முட்டை, குஞ்சு. அதேபோல் பூணுல் போடுவதன் மூலம் அந்தணன் இரண்டாம் முறையாகப் பிறக்கிறான். அதனால் அவர் பார்ப்பனன். பார்ப்புகளைப் போல் இரு பிறப்பு கொண்டவன். ஆக, ஒருத்தரைப் பார்ப்பான் என்று சொல்லி விட்டு இப்படி விளக்கம் சொல்லவா? அதே போல் பறை என்ற இசைக் கருவிக்கும் விளக்கம் சொல்ல முடியுமா? ம்? சமூகத்தில் பார்ப்பனன், பறையன் என்பதற்கெல்லாம் என்னய்யா அர்த்தம் நிலவுகிறது? தாசி என்றால் என்ன அர்த்தம் இப்போது நிலவுகிறது? நீர் என்ன 15-ஆம் நூற்றாண்டிலா வாழ்கிறீர்?