ரவுடிகள் குறித்த என் முகநூல் பதிவுகள்

அமைச்சர் சி.வி. சண்முகத்தைக் கொலை செய்து விடுவோம் என்று அரிவாளை வைத்துக் கொண்டு பயமுறுத்தி விடியோ விட்டிருக்கும் இரண்டு விஜய் ரசிகர்களும் விஜய் பெயரை பலமுறை பயன்படுத்துவதால் விஜய் மீது போலீஸ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஏனென்றால் கொலை செய்பவனை விட கொலை செய்யத் தூண்டுபவர்தான் அதிக ஆபத்தானவர்.   படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் அதிகம் உள்ளன.

தன் ரசிக ரவுடிகளை விட்டு கொலை மிரட்டல் விடும் ரவுடி நடிகன் விஜய்யை இன்னும் கைது செய்யவில்லையா? கொலை மிரட்டல் விடும் அவர் ரவுடி ரசிகர் மன்றத்தைத் தடை செய்யவில்லையா? வெட்கக்கேடு…

இதை இப்படியே விடக் கூடாது.  இப்படியே விட்டால் சினிமா விமர்சனம் செய்தால் கொன்று விடுவான்கள் ரசிகர் மன்ற ரவுடிகள்.

ஒரு அமைச்சரையே இந்த விஜய் ரவுடிகள் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு இந்த அளவு மிரட்டுகிறான்கள் என்றால் என்னையெல்லாம் என்ன செய்வான்கள்?  ம்? இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் விஜய்யைக் கைது செய்யுங்கள்.  அல்லது அவரது கொலைகார ரசிகர் மன்றத்தைக் கலைக்கச் செய்யுங்கள்.  முன்பும் மெர்சல் படத்தின் போது ஒரு பெண்ணை விஜய் ரவுடிகள் இப்படித்தான் மிரட்டினார்கள்.

கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் அயோக்கியர்களான உங்களுக்கு ஏழைபாழைகளுக்குக் கிடைக்கும் இலவச மிக்ஸிக்களைக் கிண்டல் செய்ய எங்கிருந்துடா துணிச்சல் பிறக்கிறது? உங்களைஎல்லாம் பிறந்த மேனிக்குக் குப்புறப் போட்டு பிரம்படி கொடுக்க வேண்டும்.  அண்ணாதுரையின் ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்பதற்குப் பெயர் என்னடா மூடா?