நண்பர்கள்…

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் காலை பத்தரை மணிக்கு நான் பார்த்த சினிமா என்ற தலைப்பில் அரை மணி நேரம் நான் பேசுவது ஒளிபரப்பாவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் நான் அதைப் பார்க்க முடிவதில்லை.  இருந்தாலும் நண்பர் செல்வகுமார் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்து யூட்யூபில் வெளியிட்டு வருகிறார்.  நான் இந்த நிகழ்ச்சிக்காக மிகுந்த பிரயாசை எடுத்துக் கொள்கிறேன்.  ஏனென்றால், சினிமா துறை பற்றி ஆர்வம் உள்ளவர்களுக்கு என் உரைகள் பாடமாக இருக்கும்.  இந்த வரிசையில் நான் சில முக்கியமான உலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசலாம் என்று இருக்கிறேன்.  அதிலும் அவ்வளவாக பிரபலம் ஆகாத படங்களாக எடுக்கலாம் என்று திட்டம்.  ஹிட்லர் பற்றி ஹிட்லரே எடுத்த ஒரு முக்கியமான ஆவணப் படத்தைப் பற்றியும் பேச எண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் பேசிய கிம் கி டுக் படம் பற்றி வெள்ளிக்கிழமை ஒளிப்பதிவு செய்யப்பட்டது.  வெள்ளிக்கிழமை வரை எந்த சினிமா என்று நான் முடிவு செய்யவில்லை.  வின் டிவியில் தமிழ்ப் படமாக இருந்தால் பரவாயில்லை என்றார்கள்.  நான் இந்த நிகழ்ச்சிக்காகவே சில தமிழ்ப் படங்களைப் பார்க்க வேண்டிய கசப்பான நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  அதில் ஒன்று கும்கி. உட்காரவே முடியவில்லை.  மைனா இயக்குனராயிற்றே என்று போனேன்.  கொடுமை. கொடுமை.  பிறகு யோசித்தேன்.  இந்தப் படத்தைப் பற்றி அரை மணி நேரம் விமர்சிப்பதால் என்ன பயன்?  ஒரு பயனும் இல்லை.  அதனால் ஒரு நல்ல படத்தைப் பற்றிப் பேசுவோமே என்று நினைத்துத்தான் கிம் கி டுக்கை எடுத்தேன்.  பார்த்தால் என் நூலகத்தில் கிம் கி டுக்கின் அந்தக் குறிப்பிட்ட படம் இல்லை.  ஒரு நண்பர் கேட்டார் என்று கொடுத்தது.  ஆறு மாதம் இருக்கும்.

நண்பர்களே, இது ஒரு கொலைக்கு சமமான குற்றம்.  அந்த நண்பர் கிம் கி டுக் பற்றி நான் எழுதியிருந்த இரண்டு நீண்ட கட்டுரைகளைப் படித்து விட்டு “அண்ணே, உங்களிடம் சிடி இருக்கிறதா?” என்று கேட்டார்.  உடனடியாகக் கொடுத்தேன்.  ஆறு மாதமாகத் திரும்ப வரவில்லை.  எனக்கே திரைப்பட சிடிக்களை ஒருசில நண்பர்கள்தான் வாங்கிக் கொடுக்கிறார்கள்.  இன்னமும் ஞாபகம் இருக்கிறது.  ஒருமுறை குமார் அக்னி நட்சத்திர வெயிலில் மதிய நேரம் – அண்ணா நகரிலிருந்து சாந்தோம் – பைக்கில் வந்து கொடுத்தார்.  வேர்த்து விறுவிறுத்துப் போயிருந்தார்.  திரைப்படக் குறுந்தகடுகளைச் சேகரிக்க நான் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொள்கிறேன்.  எந்தெந்த நண்பர்களோ இதற்காக மெனக்கெட்டு வேலை செய்கிறார்கள்.  ஒரு நண்பர் taiga குறுந்தகடை வாங்க மாதாமாதம் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.  அந்த சிடி விலை 25000 ரூ.  ஒன்பது மணி நேர ஆவணப் படம்.  என்னிடம் உள்ள இசை சேகரிப்புகள் ஏ.ஆர். ரஹ்மானிடம் கூட இருக்க வாய்ப்பில்லை.  ஏனென்றால், அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போய் வாங்கி வந்து கொடுக்கிறார்.  அந்த ஆல்பங்கள் அமெரிக்காவில் கூடக் கிடைப்பதில்லை.  இதையெல்லாம் பயன்படுத்தித்தான் நான் கலகம் காதல் இசை என்ற நூலை எழுதினேன்.  இந்தியாவில் என்னைத் தவிர வேறு யார் rai இசை பற்றியும் ஷாப் ஹாஸ்னி பற்றி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்?

இத்தனை சிடிக்களையும் அந்த நண்பரிடம் அள்ளிக் கொடுத்தேன்.  சரி.  வெள்ளிக்கிழமை கிம் கி டுக் பற்றிப் பேச வேண்டும்.  சிடி இல்லை.  நண்பரிடம் உள்ளது.  அவரிடம் கேட்டு வாங்கி, பார்த்து… அதற்கெல்லாம் நேரம் இல்லை.  மறுநாள் ஒளிப்பதிவு.  யூட்யூபில் பார்த்தேன்.  சப்டைட்டில்ஸ் கிடையாது.  சப்டைட்டில்ஸ் இல்லாமலேயே பார்த்துப் பேசினேன்.  என் வாசகர்களுக்கு எவ்வளவு பெரிய ஈடு செய்ய முடியாத நஷ்டம்?  இதைச் செய்ய ஒருவருக்கு எப்படி மனம் வருகிறது?

நண்பரே, ஏன் என்னுடைய எழுத்தையும் பேச்சையும் இப்படித் தடை செய்கிறீர்கள்?  இதனால் எனக்கா நஷ்டம்?  என் கையை வெட்டுவதற்குச் சமம் நீங்கள் செய்த காரியம்.

நேற்று அந்த நண்பருக்கு போன் செய்தேன்.  சிடி பற்றிக் கேட்டேன்.  ஆமாண்ணே, ஒரு நாலஞ்சு சிடி குடுத்திங்களே…   குடுத்து அனுப்புறண்ணே…

எப்படி… நாலஞ்சு சிடி…  நாற்பது சிடி நாலஞ்சு சிடி ஆகி விட்டது ஆறு மாதத்தில்.

இவர்களெல்லாம் எப்படி என் எழுத்துக்கு வாசகர்களாக இருக்கிறார்கள்; எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை.  சமூகம்தான் எழுத்தாளனை சூத்தடிக்கிறது என்றால் நண்பர்களும் சூத்தடிக்கிறார்கள்…  fuck yourself you bloody charu…

 

 

 

Comments are closed.