saturday night fever… (இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்)

கடந்த 25 ஆண்டு தாம்பத்ய வாழ்வில் இன்றுதான் முதல்முறையாக அவந்திகா தன் அம்மா வீட்டில் இரவு தங்குவதற்குப் போயிருக்கிறாள். ஏனென்றால், நாளை ஞாயிற்றுக்கிழமையும் ட்ரில்லிங் போடுவார்களாம். நான் மாலை நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை போன் செய்து எப்போது வருவாய் என்று கேட்டுக் கொண்டே இருப்பாள் அவந்திகா. அதிலும் பத்து மணி ஆகி விட்டால் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வரும் போன். அதனால் அதிகபட்சம் பத்தரைக்கே விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து விடுவேன். இன்றுதான் அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாளே, அதிலும் 25 ஆண்டுகளில் முதல் முறை இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்துள்ளது; எந்தப் பதற்றமும் இல்லாமல் நண்பர் யாரோடாவது டின்னர் சாப்பிடலாம், அடித்துப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓட வேண்டாமே என்று நினைத்து ராம்ஜிக்கு போன் போட்டேன். வீட்டில் இருப்பதாகச் சொன்னார். இன்று ஆறு மணிக்கே வீட்டுக்குப் போய் விட்டாராம். வீட்டில் இருப்பவர்களை எப்போதுமே வெளியே வரச் சொல்லி அழைக்க மாட்டேன். வீட்டில் என் மரியாதை போய் விடும்.
ராகவனோடுதான் மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை திருவல்லிக்கேணியை சுற்றினேன். ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டால் வீட்டில் பதற்றத்துடன் என்னைத் தேட ஆரம்பித்து விடுவார்கள் என்று பதற்றத்துடன் சொல்லிக்கொண்டே பதற்றத்துடன் ஸ்கூட்டரைக் கிளப்பினார் ராகவன்.
அராத்து வியட்நாமில் இருக்கிறார்.
ஸ்ரீராமுக்கு போன் போட்டேன். வெளியூரில் இருக்கிறார்.
செல்வாவுக்கு ஃபோன் போட்டேன். வழக்கம் போல் எடுக்கவில்லை. எப்படியும் காலையில் அழைத்து விடுவார்.
கருப்புசாமிக்கு போன் போட்டேன். ஸ்விட்ச் ஆஃப்.

இன்னொருவர் அரசு அதிகாரி. அவர் நிச்சயம் வருவார். இன்று சனிக்கிழமை. வீட்டில் அவருக்கு நல்ல சுதந்திரம் உண்டு. அவர் மனைவி அவரைத் தன் நண்பர் போல பாவிக்கிறார். தைரியத்துடன் போன் செய்தேன். நாளை காலை தில்லியிலிருந்து நிதி மந்திரி வருகிறார். அவரோடு மீட்டிங் இருக்கிறது. இப்போது அதற்கான மீட்டிங்கில் இருக்கிறேன். நாளை போலாமா என்றார். ஐயோ ஐயோ என்று போனை வைத்து விட்டேன்.
ராஜேஷுக்கு போன் போட்டேன். சுவிட்ச் ஆஃப்.
முகேஷுக்கு போன் போட்டேன். பம்பாய் போயிருப்பதாகச் சொன்னார்.

உமேஷுக்கு போன் போட்டேன். கல்யாண விசேஷமாக பிஸியாக இருக்கிறேன், நாலாந்தேதிக்கு மேல் எப்போது அழைத்தாலும் வருகிறேன் என்றார்.
ஒரு வருடமாக வீட்டில் ஒரு வைன் பாட்டில் இருக்கிறது. இயற்கையான முறையில் நிலத்துக்குள் வைத்து தயாரிக்கப்பட்ட வைன். மிக விலை உயர்ந்தது. ஒரு நண்பர் கொடுத்தது. அதை எடுத்து ஒரு கிளாஸ் அருந்தலாம் என்று நினைத்தேன். பார்த்தால் கார்க் மூடி. ஐயோ, வைன் ஒப்பனர் வேணுமே? அதற்கு எங்கே போக? வெளிநாடாக இருந்தால் கீழே டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குப் போய் ஒரு வைன் பாட்டில் (கார்க் இல்லாதது) வாங்கிக் கொண்டு வரலாம். ஆனால் தமிழ்நாட்டில் வைன் ஷாப் இருக்கும். அங்கே வைன் தான் இருக்காது. அடையாறில் உள்ள எலீட் டாஸ்மாக்கில் கிடைக்கும். எவன் அடையாறு வரை போவது? போய்யா.
பிறகு அவந்திகாவுக்கு போன் போட்டு விசாரித்துக் கொண்டிருந்தபோது காயத்ரியிடமிருந்து போன். அவந்திகாவிடம் பேசி முடித்து விட்டு காயத்ரியை அழைத்தேன். என்ன, எல்லா கேர்ல் ஃப்ரெண்ட்ஸ் கூடவும் பேசியாயிற்றா என்றாள்.
நீ அநேகமாக ஜெயமோகனின் ஸ்லீப்பர் செல்லாத்தான் இருக்கணும் என்றேன்.

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai