கீழடியும் ஸ்டாலினும்…

திமுக தலைவர் ஸ்டாலின் பி.ஏ. படித்தவர். அவரை நான் மதிக்கிறேன். நானோ பியுசி ஃபெயில். ஆனால் ஸ்கூலில் படித்த ஹிஸ்ட்ரி ஏதோ கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.
ஸ்டாலின் அவர்கள் இனி இந்திய வரலாற்றைக் கீழடியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சிந்து சமவெளி நாகரீகம் கி.மு. 3300 இலிருந்து கி.மு. 1300 வரை இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று எட்டாங்கிளாஸில் படித்திருக்கிறோமே. அதை என்ன செய்வது? ஏற்கனவே உலக வரலாற்றில் இடம் பெற்று விட்ட அந்தத் தகவலை எப்படி அழிக்கலாம்?

ஆனால் ஒன்று. தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தமிழில் எழுதப்பட்டு குறைந்த பட்சம் 2000 ஆண்டுகள் ஆகி விட்டன. மேலும், அந்த நூல் அதற்கு முன்னர் எழுதப்பட்ட பல நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதே தமிழருக்கும் தமிழ்ப் பண்பாட்டின் பழமைக்கும் போதுமே ஸ்டாலின் சார்?

நல்லவேளை, அமீத் ஷா நம் ஸ்டாலின் மாதிரி பி.ஏ. படித்தவர் இல்லை என்று நினைக்கிறேன். படித்திருந்தால் சிந்து சமவெளி நாகரீகம் பற்றிச் சொல்லி உலக வரலாற்றையே வட இந்தியாவிலிருந்துதான் தொடங்க வேண்டும், இந்தி என்ற சொல்லிலிருந்துதான் சிந்து என்ற சொல் தோன்றியது என்றெல்லாம் அமர்க்களம் பண்ண ஆரம்பித்து விடுவார். எனவே ஸ்டாலின் ஸார் கொஞ்சம் அமைதியாக இருங்கள். ப்ளீஸ்.