மாயா இலக்கிய வட்டம் : உரையாடல்

நேற்றைய Zoom சந்திப்பின் காரணமாக பூச்சியின் பக்கம் வர முடியவில்லை.  நேற்றுதான் பல தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.  மொத்தம் இரண்டு மணி நேரம் நடந்தது பேச்சும் உரையாடலும்.  அந்த இரண்டு மணி நேரமும் போனை கையிலேயேதான் பிடித்துக் கொண்டிருந்தேன்.  அது அவசியமில்லை என்று காயத்ரி சொன்னாள்.  ஆமாம்.  போனை ஒரு பக்கம் வைத்துக் கூட இருக்கலாம்.   அது பாட்டுக்கு சாய்ந்தபடியோ நின்றபடியோ நின்று கொண்டிருக்கும்.  அது ஏன் எனக்குத் தோன்றாமல் போயிற்று என்று தெரியவில்லை.  இன்னொரு ஜென்ரல் நாலட்ஜ், ஸூமை டெஸ்க்டாப்பிலேயே டவுன்லோட் செய்து அதன் மூலம் பேசியிருக்கலாம்.  ஏன் கைபேசி?  அடுத்த முறை இதையெல்லாம் செயல்படுத்த வேண்டும்.  மற்றபடி ஒரு மணி நேரம் உரையாற்றினேன்.  ஒரு மணி நேரம் கேள்வி பதில்.  நன்றாகத்தான் போனது என்று நினைக்கிறேன். 

குறுநாவலின் தோற்றம் பற்றி அய்யனார் பேசச் சொன்னார்.  அது ஒரு அரை மணி நேர டாபிக்.  பொக்காஸியோவின் டெகாமரானிலிருந்து தொடங்குகிறது குறுநாவலின் வரலாறு.  ஒரு காலத்தில் சுஜாதா குமுதத்தின் ஆசிரியராக இருந்தபோது மாதம் ஒரு முறை இளைஞர் சிறப்பிதழ் என்ற இணைப்பும் வரும்.  அதில் டெகாமரானிலிருந்து சில கதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.  அதெல்லாம் இப்போது என் வசம் இல்லை.  வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (மே, 10) நேற்று போலவே மாலை மூன்றரை மணிக்கு ஸூம் மூலம் பேசலாம் என்று இருக்கிறேன்.  ஒருங்கிணைப்பு மாயா இலக்கிய வட்டம், சிங்கப்பூர்.  ஒரு பத்து நிமிடம் குறுநாவல்களின் தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சிப் போக்குகள் பற்றிப் பேசி விட்டு, புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றலாம் என்று நினைக்கிறேன்.  இந்த மாலை நேரம் மூன்றரையை மாற்றி அமெரிக்க வாசகர்களும் கலந்து கொள்வது போல் வைக்கலாமா என யோசித்தேன்.  எனக்குக் கடுமையான எடுபிடி வேலைகள் இருப்பதால் காலையில் – ஏன், மாலை மூன்று மணி வரை கணினியின் முன்னே அமர முடியவில்லை.  இன்று எடுபிடி வேலை மிக அதிகம்.  நாலரை மணிக்குத்தான் இந்தப் பக்கமே வர முடிந்தது.  நேற்று பூனை ஃபாக்டரியில் லீவு எடுத்து விட்டதால் இன்று வேலை அதிகம்.     மூன்றரைக்கு மேலே, ஐந்து ஆறு என்று வைத்தால் அமெரிக்க வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.  ஆனால் இதை ஒருங்கிணைக்கும் சிங்கப்பூர் வாசகர்களால் முடியாது.  அவர்களுக்கு இரவு ஆகி விடும்.  மூன்றரை என்றால் அவர்களுக்கு மாலை ஆறு.  ஒன்பது வரை கூடப் பேசலாம்.  இரவு உணவுக்கும் பிரச்சினை வராது.  இதுதான் சரி. 

Challenges of New Writing என்பது தலைப்பு.  இது பற்றி ஒரு மணி நேரம் பேசலாம்.  இந்தப் பேச்சைக் கேட்கவும், உரையாடலில் கலந்து கொள்ளவும் நீங்கள் எதுவுமே படிக்காமலும் வரலாம்.  படித்து விட்டுத்தான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.  படித்து விட்டு வந்தால் கேள்வி பதில் பகுதி சுவாரசியமாக இருக்கும்.  படிக்க வேண்டும் என்றால், என்னென்ன படிக்கலாம் என்று சில யோசனைகள் தருகிறேன். 

1.The Beach: Allan Robbe-Grillet (ஆலன் ராப் க்ரியே) இந்தக் கதைக்கு பின்வரும் இணைப்பில் இரண்டு மொழிபெயர்ப்புகள் உள்ளன. 

2. என்னுடைய சிறுகதைகள்: நேனோ, கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், the joker was here, பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும்.

3. ஸீரோ டிகிரி

4. இலக்கியத்திலிருந்து சினிமா பல உத்திகளை எடுத்துக் கொள்வது போல சினிமாவிலிருந்தும் சில பல உத்தியகளை இலக்கியம் எடுத்துக் கொள்ளலாம் என்பதால் நீங்கள்  Bela Tarr இயக்கிய Turin Horse என்ற படத்தையும் பார்த்து விட்டு வரலாம்.

இது என்ன, என்னுடைய கதைகளையும் நாவலையும் மட்டுமே குறிப்பிடுகிறேனே என எண்ண வேண்டாம்.  மற்ற கதைகளையும் நீங்கள் படிக்கலாம்.  ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ்,  இத்தாலோ கால்வினோ, மிலோராத் பாவிச் ஆகியோரையும் கூடவே உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.  முடிந்தால் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தவிருங்கள்.  மூவருக்கும் மிக மிக மோசமான மொழிபெயர்ப்புகளே தமிழில் கிடைக்கின்றன. 

நேற்றைய நிகழ்வு எனக்கும் பெரும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்தது.  நண்பர்களின் கேள்விகளிலும் எனக்குப் பெரிய அதிருப்தி எதுவும் இல்லை.  இதை விடவும் ஆழமான கேள்விகள் ஒரு அறைக் கூட்டத்தில் நேருக்கு நேரான சந்திப்பில் மட்டுமே சாத்தியம் எனத் தோன்றுகிறது.  அல்லது, எப்போதும்போல் எழுத்தில் எவ்வளவு ஆழமாகவும் போகலாம். 

விவாதங்களின் போது என்னால் பலருடைய முகத்தையும் பார்க்க முடியவில்லை.  என் முகமேதான் எனக்குத் தெரிந்து எரிச்சலூட்டியது.  அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. 

நான் பேசியதை யாரேனும் பதிவு செய்தீர்களா?  அது எல்லாவற்றையும் திரும்ப என்னால் எழுத முடியும் என்று தோன்றவில்லை. 

வாசக நண்பர் ரமேஷ் பின்வரும் இணைப்புகளை அனுப்பியிருக்கிறார்.  நான் ஏற்கனவே படித்து விவாதித்ததுதான்.  நீங்களும் படிக்கலாம்.  ஆங்கிலத்தில் படிக்கும் வழக்கம் இல்லை என்று சொல்லாதீர்கள்.  ஆரம்பத்தில் நானும் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் கூடப் படித்துப் புரிந்து கொள்ள முடியாதவனாகத்தான் இருந்தேன். 


Umberto Eco NYRB
https://www.nybooks.com/articles/1995/06/22/ur-fascism

Reference #2

The Death of the Author by Roland Barthes
http://www.tbook.constantvzw.org/wp-content/death_authorbarthes.pdf

இந்த வாசகர் சந்திப்பு – உரையாடல் – பேச்சு வடிவம் பிரமாதமாக இருக்கிறது.  எழுத்தைப் படிப்பதை விட பேச்சைக் கேட்பது எளிதானதுதான்.  என்னுடைய பல ஷார்ஜா நண்பர்கள் வேலைக்காக துபய் சென்று ஷார்ஜா திரும்பும்போது (ஷார்ஜாவில் துபயை விட வீட்டு வாடகை கம்மி) – போக ஒரு மணி நேரம், வர ஒரு மணி நேரம் – இரண்டு மணி நேரமும் இப்படிப்பட்ட உரைகளைத்தான் கேட்கிறார்கள்.  திரைப்பாடல்களைக் கேட்பதை விட இது எத்தனையோ மேல்.   

அன்புள்ள சாரு,

zoom சந்திப்பு மிக அற்புதமான அனுபவம்.  உலகமெங்கும் இருந்து இத்தனைபேருடன் கலந்து கொண்டது தனி அனுபவம்.

விநோத நூலகம் கதையின் உள்மடிப்புகளை விளக்கிய விதம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது. 

குப்புசாமி சொன்னதுபோல இந்த உரை கட்டுரையாக வேண்டும்.

என்னதான் கட்டுரை ஆனாலும் நேரலையில் கலந்து கொண்ட அனுபவம் தனிதான். இலக்கியச் சுற்றுலா என நீங்கள் முன்வைத்த விஷயமும் குப்புசாமி பகிர்ந்த சில அபூர்வமான விஷயங்களும் இந்த நாளை நிறைவாக்கியது.

இரண்டுமணி நேரம் திகட்டாத இலக்கிய விருந்து.

கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான பல நாவல்கள் உண்மையில் நாவல்கள் அல்ல, குறுநாவல்கள் என்ற அராத்துவின் கிண்டல் யோசிக்க வைத்தது.

தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மனமின்றி,  குறுக்கு வழிகளில் பிரபலமாவதன் மூலம் அடைவது எதுவும் இல்லை.

இலக்கியம் என்பது இடைவிடாத கற்றல்.  கற்றுக் கொண்டே இருப்பது.

அமர பண்டிதர் கதையில் வரும் ஆலயம் குறித்து குப்புசாமி சொல்லும்போது  ஆரம்ப நிலை வாசகன் போல அதை நீங்கள் கவனித்த விதம்… அதுவே ஒரு செய்தியாக இருந்தது.

Your life is your message…

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்.

சாரு,

வெவ்வேறு களங்களின், வெவ்வேறு காலங்களின் படைப்புகளை ஒருப் புள்ளியில் இணைத்த உங்கள் விசேஷமான உரையைக் கேட்க வாய்த்தது – உங்கள் புண்ணியத்தில் அவற்றில் ஒன்றிரண்டை வாசிக்கவும்தான்.  உங்கள் நேரத்திற்கும் அறிமுகத்திற்கும் நன்றி. 

உரையின் தரத்திற்கேற்பக் காத்திரமான கேள்வி ஏதுமில்லாதலால் பேசவில்லை. அந்த கதைகளில் சொல்லாமல் விடுபட்டவையும் என்னை ஈர்த்தன.  For instance, in The  Two Old Men, why doesn’t Efim reveal to the poor family that the kind pilgrim was his friend Elijah?  Also, in the end, why isn’t Elijah not keen to know the fate of the poor family? Fascinating indeed.

எட்டாவது நாளும் ஒரு அற்புதம்தான், வேறொரு சமயம் எழுதுகிறேன்.

மற்றபடி, உலக இலக்கியங்களை பெயர்க்கும் திரு. குப்புசாமி, சார்வாகன் தன் ஊர்க்காரரென்று கொஞ்சமாக பெருமையடித்துக் கொண்டது,  புன்னகைக்க வைத்த ஒரு நல்ல நகைமுரண் 🙂

அன்புடன்,
ஹரி பாஸ்கர்
பெங்களூரு.

இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் குறிப்பாக ரமாவுக்கும் என் நன்றி. 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai