சி.சு. செல்லப்பா

சார் வணக்கம், 

என்னுடைய கேள்வி:   சி.சு. செல்லப்பா முதற்கொண்டு அசோகமித்திரனின் அம்மா வரை என் ஊரை (வத்தலகுண்டு ) பூர்விகமாகக் கொண்டவர்கள். இது போன்று சுப்ரமணியம் சிவாவும் இப்பகுதியைச் சார்ந்தவர்தான். 

ஆனால் இதை எல்லாம் நினைத்துப் பெருமைப்படும் அளவு தற்போதைய ஊர் நிலவரம் இல்லை.   இவர்களை எடுத்துச் சொல்லி எவரிடமும் வாயார பெருமை கூட அடித்துக் கொள்ள முடியாது.  இவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கூட மக்களிடம் இல்லை. 

இந்த ஊரில் இருந்து எவ்வாறு இவர்கள் ஊற்றெடுத்தனர் என்பது இன்று வரை ஆச்சரியமாக உள்ளது. ஊரின் நடுவில் கஞ்சா விற்பதற்கும் தயாரிப்பதற்கும் தனி இடமே உள்ளது. கட்சி வேஷ்டிகள் மாத்திரமே ஊரில் வாழ்ந்த பெரிய மனிதர்களின் அடையாளமாகத் திகழ்கிறார்கள். 

கேள்வி:

இது போன்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்த எழுத்தாளர் செல்லப்பா புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடந்தார் என்றால் இது அவரது அப்செஷனா, அல்லது, செல்லப்பாவும் அவரைப் போன்ற மனிதர்களும் மசோகிஸ்ட்டுகளா, அல்லது, என்னிடம் ஞானம் உள்ளது, அதை எவன் மதித்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி… கஷ்ட ஜீவனத்தை விரும்பி ஏற்று…?  இதில் வருத்தம் என்ன வேண்டிக் கிடக்கிறது? 

அசோகமித்திரனின் தாயாரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்கள், அந்தப் பாட்டி அந்தக் காலத்தில் எவ்வாறு வத்தலகுண்டுவிலிருந்து, ஹைட்ரபாத் சென்று அப்புறம் சென்னை வாசம் செய்தார் என்று…

அதிகப்பிரசங்கித்தனம் இருந்தால் மன்னிக்க வேண்டும்.

உங்கள் மாணவன்,

கோபிநாத்.

நிச்சயம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.  மற்றபடி அசோகமித்திரனின் அம்மா பற்றி எதுவும் தெரியாது.  நீங்கள் சொல்லித்தான் இப்போது தெரிந்து கொள்கிறேன்.  இந்த விஷயம் அசோகமித்திரன் இருக்கும்போதே தெரிந்திருந்தால் கேட்டிருக்கலாம்.  அவரது நெருங்கிய நண்பர் அழகிய சிங்கருக்கே தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.

மே 31 ஸூம் மீட்டிங்கில் (இந்திய நேரம்) காலை ஆறு மணிக்குச் சந்திப்போம்.