12. இசை பற்றிய குறிப்புகள்

இந்தச் சம்பவம் நடந்தது 1926.  ஒரு பத்து வயதுச் சிறுமி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வருகிறாள்.  அவளை அவளுடைய அம்மா திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலிருந்து ஒரு லாலி பாடச் சொல்கிறாள்.  அம்மாவே பக்கத்தில் அமர்ந்து வீணையை மீட்டுகிறாள்.  சிறுமி பாடுவதை ஓரியண்டல் ரெகார்ட்ஸ் நிறுவனம் ஒலிப்பதிவு செய்து கொள்கிறது.  அதுதான் கீழே வருவது.  அதில் சில அபூர்வமான புகைப்படங்களும் உள்ளன.  சிறுமியின் அம்மாவின் பெயர் மதுரை சண்முகவடிவு.  சிறுமியின் பெயர் சுப்புலட்சுமி. பின்னாளில் உலகப் பிரசித்தி பெற்ற அச்சிறுமியின் முதல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் இதுதான்.   

பாடலை இயற்றிய பகழிக் கூத்தர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.