விவாதம்

அந்திமழையில் நான் எழுதியிருந்தது பற்றி மனுஷ்ய புத்திரன் எழுப்பியுள்ள கேள்விகள் மிகவும் முக்கியமானவை.  இப்போது அவர் எழுதிய அந்நிய நிலத்தின் பெண்ணைப் படித்துக் கொண்டிருப்பதால் பதில் எழுத நேரம் இல்லை.  முடித்ததும் எழுதுவேன். Manushya Puthiran: பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஒரு தவறான கருத்து வேறு சமூகத்தில் நிலவுகிறது. கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் நிலை வயலில் நின்று வேலை பார்க்கும் குடியானவர்களின் நிலையை விட மோசமானது. நாள் முழுவதும் அக்கினிக்கு (தீபாராதனை) அருகிலேயே … Read more

தற்கொலைக் குறுங்கதைகள் : அராத்து

நான் அராத்துவை ப்ரமோட் செய்வதாக சில புகார்கள் வந்தன.  உண்மையைச் சொல்கிறேன்.  நான் ப்ரமோட் செய்ய முயற்சித்த ஒரே நண்பர் மனோஜ் தான்.  ஆனால் “மௌனியே பதினஞ்சு கதைதான்  எழுதியிருக்கிறார். நான் பதினாறு கதை எழுதி விட்டேன்” என்று சொல்லி அடம் பிடிப்பவரிடம் என்னால் என்ன செய்ய முடியும்? ஆக, இறைவன் மனது வைத்தால் ஒழிய யாரும் யாரையும் ப்ரமோட் செய்ய முடியாது.   தருண் தேஜ்பாலின் ஒரு நாவல் 4 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது.  ஆனால் அவர் … Read more

ஒரு நற்செய்தி

சில மாதங்களாகவே சாருஆன்லைனில் அவ்வளவு அதிகமாக நான் எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இது சம்பந்தமாக கோபக் கடிதங்கள் அவ்வப்போது எனக்கு வருவதுண்டு.  அராத்து, துரோகி போன்ற நண்பர்கள் கூட நேரில் இது பற்றி திட்டுவதுண்டு.  பதிலுக்கு சிரிப்பதோடு சரி.  நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள். இரண்டு தினங்களாக வாக்கிங் கூட போகாமல் – புயல் அடித்த தினங்களில் கூட வாக்கிங்கை நிறுத்தியதில்லை – கோணல் பக்கங்கள் நூலை … Read more

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் & எக்ஸைல்

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு  கலா கௌமுதி என்ற பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருக்கிறது.  கலா கௌமுதி மலையாளத்தின் புகழ்பெற்ற இலக்கியப் பத்திரிகை.  இது ஒரு வாரப் பத்திரிகை என்பதும் நம் கவனத்துக்குரிய விஷயம்.  மேலும், இதன் ஸர்க்குலேஷன் ஒரு லட்சம் என்பதிலிருந்து மலையாளிகளின் இலக்கிய வாசிப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கலா கௌமுதியில் நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.   ராஸ லீலா நாவலே … Read more