அசோகமித்திரனின் ஆவி

13.4.17 அசோகமித்திரனின் ஆவி சும்மா பூந்து விளையாடுகிறது.  இறந்து இத்தனை தினங்கள் ஆகியும் சர்ச்சை தீர்ந்தபாடில்லை.  அசோகமித்திரனின் இறுதிச் சடங்கில் சுமார் 25 பேர் தான் கலந்து கொண்டார்கள் என்று குமுதத்தில் எழுதியிருந்தேன்.  அதோடு விட்டிருக்கலாம்.  என் போறாத காலம், வைரமுத்துவின் பெயரையும் சேர்த்து விட்டேன், இப்படி: ”பாரதியின் சவ ஊர்வலத்தில் பதினான்கு பேர் கலந்து கொண்டார்கள்.  அவருடைய பிணத்தின் மீது மொய்த்த ஈக்களை விட சவ ஊர்வலத்துக்கு வந்த எண்ணிக்கை கம்மி என்று துயரத்துடன் எழுதினார் … Read more

மணி ரத்னத்துக்கு ஒரு கடிதம் : பிரபு காளிதாஸ்

11.4.17 பிரபு காளிதாஸ், முகநூலில்: இது மணிரத்னம் பார்வைக்குப் போகுமா தெரியவில்லை. பார்க்கலாம். மதிப்பிற்குரிய மணிரத்னம் அவர்களுக்கு, உங்களிடம் முதலில் ஒன்று சொல்லவேண்டும் ஸார். உங்களுக்கு இப்போது ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறார்கள் அல்லவா ?. அவர்கள் இன்னும் இரண்டு வருடத்தில் உங்களை ரசிக்க முடியாத ஏரியாவுக்குப் போய்விடுவார்கள். அதாவது அடுத்த தளத்திற்கு சென்றுவிடுவார்கள். I Bet. என்ன காரணம் தெரியுமா ? இதே மாதிரி உங்களுக்குக்காக இருபது வருடம் முன்னால் கொடி பிடித்த ரசிகர் கூட்டத்தில் … Read more

taemil!

11.4.2017 தமிழில் படிப்பதையே நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.  அதிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதப்படும் தமிழைப் பார்க்கும் போது தமிழை வன்கலவி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எழுதியிருந்த கட்டுரையில் சுமாராக 150 சந்திப் பிழைகள் இருந்தன.  பேசாமல் ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவிலும் ஒற்றெழுத்துக்களைப் போட்டு விடுங்கள் என்று சொன்னேன்.  சுத்தமாக யாரும் ஒற்றெழுத்தே போடுவதில்லை.  சந்திப் பிழை என்றால் சந்தி பிழை.  750 வார்த்தைகள் கொண்ட கட்டுரையில் 150 சந்திப் பிழைகள்.  … Read more

கடல் கன்னி

கடல் கன்னி ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) ஆங்கிலத்திலிருந்து தமிழில்: சாரு நிவேதிதா “இதோ பாருங்கள் டாக்டர் பால் எக்கர், இந்த வழக்கில் உங்கள் மீது நாங்கள் காட்டியிருக்கும் பொறுமைக்கு நீங்கள் இப்போது சாதிக்கும் மௌனம் எந்த விதத்திலும் நியாயமாக இல்லை. நீதிக்குத் தேவை அழுத்தமான ஆதாரங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.” பால் எக்கர் தன் பச்சை நிறக் கண்களால் சூனியத்தை … Read more