கடவுளும் பக்தர்களும்

எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன், படிக்காதவர்களை விட (நான் படிப்பு என்று சொல்வது பள்ளிப்படிப்பை அல்ல) படித்தவர்கள்தான் அதிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள், அதிக மூடர்களாக இருக்கிறார் என்று. நேற்றைய பிக்பாஸில் என்ன நடந்துள்ளது என்று பீராய்ந்தேன். அதாவது, புத்தகத்தில் பக்கங்களைப் புரட்டி விட்டுப் புரட்டி விட்டுப் படிப்பது போல அஞ்சு பத்து நிமிஷத்தை ஓட விட்டுப் பார்ப்பது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் இன்னும் ஆறு நாட்கள் என்ற அறிவிப்பும் அதில் கமல் படமும் தெரிகிறது. அங்கே உள்ள … Read more

ஜெயலலிதாவின் மரணம் : கார்ல் மார்க்ஸ்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நலம் குறித்து நாங்கள் பொய் சொன்னோம்” என்று அதிமுகவின் மந்திரிகளில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அது இந்த விவகாரம் மீண்டும் சமூகப் பரப்பில் விவாதமாக விரிவடைய வழிவகுத்திருக்கிறது. திண்டுக்கல் அப்போது பொய் சொன்னாரா என்று கேட்டால், இல்லையென்றே நான் சொல்வேன். இப்போது இவ்வாறு சொல்வதன் மூலம் சீனிவாசன், தனக்கு எதோ இந்த விவகாரத்தில் பொய் சொல்லக்கூடிய அதிகாரம் அப்போது இருந்தது போலவும், அதை அவர் பிரயோகித்துவிட்டது … Read more

ஹே ராம் – ஒரு இந்துத்துவ அஜெண்டா

17 ஆண்டுகளுக்கு முன்பு உயிர்மையில் எழுதி என்னுடைய அலைந்து திரிபவனின் அழகியல் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஹே ராம் பற்றிய விமர்சனக் கட்டுரை இது.  ஹே ராம் எப்படிப்பட்ட இந்துத்துவ சினிமா என்பதைக் கட்டுடைப்பு – deconstruct – செய்யும் கட்டுரை. நண்பர் ஒருவரின் சிபாரிசின் பேரில் ஹேராம் பார்க்க நேர்ந்தது. அரங்கத்தின் உள்ளே கூட்டம் மிகக் குறைவாக இருந்ததன் காரணம், படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது.  மூன்றரை மணிநேர படத்தில் இருபது நிமிடம் மட்டுமே … Read more

யாருக்காக எழுதுகிறேன்?

விவேகம் படத்தை காணொளியில் விமர்சனம் செய்த போது என் பெயரையே கேள்விப்பட்டிராத ஆயிரக் கணக்கான அஜித் ரசிகர்கள் என்னென்ன விதமாகவோ எதிர்வினை செய்தார்கள்.  அவர்கள் அனைவரின் பொதுவான கேள்வி, யார் இவன் என்பது.  அதைப் பற்றி நான் அக்கறை கொள்ளவில்லை.  வந்து விழுந்த வசைகள் என் மனதுக்குள்ளேயே செல்லவில்லை. ஆனால் நேற்று ஸ்ரீராமுடன் சவேரா ப்ரூ ரூமில் நான் இதுவரை எழுதிய சினிமா கட்டுரைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது மனதுக்குள் ஒரு ஆழ்ந்த துயரம் ஏற்பட்டது.  … Read more

an open letter to mr kamal haasan

அன்புள்ள நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு, வணக்கம்.  பின்வரும் சிறிய குறிப்பு ஒன்றை இரண்டு தினங்களுக்கு முன்பு எழுதினேன்.  அதை முதலில் பார்ப்போம். ”இப்போதுதான் கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் ஏன் கமலுக்கு இத்தனை எதிர்ப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் ஒரு நண்பர். தயவுசெய்து நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள். கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் போனதும் அங்கிருந்த ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலில் விழுகிறார்கள். அதிலும் சிநேகன், விட்டால் அப்படியே தரையிலேயே படுத்துக் … Read more