கு.ப.ரா. பற்றிய என் உரை

ஷ்ருதி டிவி கபிலனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நவீன விருட்சம் சார்பில் நடந்த கூட்டத்தில் நேற்று இரவு 8.30 மணிக்குப் பேசிய பேச்சை இன்று காலையில் பதிவேற்றம் செய்து விட்டார்.  கு.ப.ரா. பற்றிப் பேச வாய்ப்பு அளித்த என் நீண்ட கால நண்பர் அழகிய சிங்கருக்கும் என் நன்றி.

Towards a Third Cinema

Towards a Third Cinema என்ற தலைப்பில் சில லத்தீன் அமெரிக்க இயக்குனர்கள் பற்றி நான் எழுதிய நூல் நாளை வெளிவர உள்ளது.  வெளியீட்டு விழா எல்லாம் இல்லை.  நாளை நடக்கும் நவீன விருட்சம் நடத்தும் இலக்கிய விழாவில் அந்நூல் விற்பனைக்குக் கிடைக்கும்.  அவ்வளவுதான்.  இந்த நூலில் விசேஷம் என்னவென்றால், இதில் பேசப்பட்டிருக்கும் திரைப்படங்கள் பற்றிய மதிப்புரைகள் ஆங்கிலத்திலேயே இல்லை.  ஏதோ ஒன்றிரண்டு படங்கள் பற்றி ஒன்றிரண்டு கட்டுரைகள் உள்ளன.  இதுவரை சர்வதேசத் தளத்தில் பேசப்படாத மிக … Read more

ஊடகப் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர்

ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர் முகநூலில் எழுதியிருப்பதற்காக அல்லது வேறொருவர் எழுதியதைத் தன் பக்கத்தில் போட்டதற்காக அவர் எல்லா ஊடகப் பெண்களிடமும் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். படுக்காமல் ஊடக வேலை கிடைக்காது என்று சொன்னால் அதன் உள்ளர்த்தம் என்ன தெரிகிறதா? எனக்கு நீண்ட காலப் பழக்கம் உள்ள எஸ்.வி. சேகர் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசுவார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. 86 … Read more

அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி

எழுத்தைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி இது. இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை பங்கேற்குமாறு அந்திமழை அழைத்து மகிழ்கிறது. பரிசு விவரங்கள்: •         முதல் பரிசு – ரூ.10000 •         இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு] •         மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு. … Read more

லேடீஸ் தேசிகா தெருவில் கு.ப.ரா.வும் நானும்…

கு.ப.ராஜகோபாலன் என்  மனதுக்குப் பிரியத்துக்குரிய எழுத்தாளர்.  கும்பகோணத்துக்காரர்.  தஞ்சை மாவட்டம் என்றால் எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு.  தமிழ் இலக்கியமே ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் தான் குடியிருந்தது.  அதிலும் கும்பகோணத்தில்.  அதிலும் ஒரு குறிப்பிட்ட தெருவில். கு.ப.ரா. பற்றி சுமார் ஒரு மணி நேரம் பேச இருக்கிறேன்.  அது பற்றிய அழைப்பிதழ் இதோ: விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 35                    கு.ப. ராஜகோபாலனும் … Read more

பெயர்க் காரணம்

எனக்குப் புத்தாண்டு வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றி. தனித்தனியே வாழ்த்து அனுப்ப முடியாததற்கு மன்னிக்கவும்.  மிகக் கடுமையான வேலை நெருக்கடியில் இருக்கிறேன்.  பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் தொகுதியை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  செப்பனிடுதல் என்றால் என்ன? சி.சு. செல்லப்பா பற்றிய கட்டுரையில் இப்படி ஒரு இடம் வருகிறது: ”இந்தப் போராட்டத்தின் பயனாக பிரிட்டிஷ் அரசு சில இடங்களைத் தவிர மற்ற ஊர்களில் மக்கள் கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று தான் போட்ட … Read more