ராட்சசன்

திரைக்கதையில் ராட்சசன் போல் சுத்தமாக இருந்த ஒரு தமிழ் சினிமாவைப் பார்த்ததில்லை என்ற அர்த்தத்தில் ராஜேஷ் எழுதியிருந்த பதிவைப் பார்த்து விட்டு, நேற்று ராட்சசன் போனேன். இயக்குனர் ராம்குமார். நான் கொரியன் த்ரில்லர் படங்களையும் அடிதடி சண்டைப் படங்களையும் மிக விரும்பிப் பார்ப்பவன். சொல்லப்போனால் என் ஒரே பொழுதுபோக்கு அதுதான். கிட்டத்தட்ட எல்லா கொரியன் படங்களையும் பார்த்து விட்டதால் இப்போது ஹாலிவுட் சீரியல்களைப் பார்க்கிறேன். ஆனால் கேம் ஆஃப் த்ரான்ஸ் அளவுக்கு விறுவிறுப்பான சீரியல்கள் கம்மிதான். Breaking … Read more

அதிகாரம் அமைதி சுதந்திரம்

நான் எழுதிய அதிகாரம் அமைதி சுதந்திரம் நூல் இன்னும் சில தினங்களில் வெளிவரும். முன்பதிவு செய்யுங்கள். புத்தகத்திலிருந்து ஒரு பத்தி: நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்… யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், … Read more

தீபாவளி

தீபாவளிகள் எப்போதுமே எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. வெடிச்சத்தம். அதோடு, காலையில் பட்டினி வேறு கிடக்க வேண்டும். தீபாவளியும் அதுவுமாக ஓட்டலில் சாப்பிட மனம் இஷ்டப்படாது. மனம் தானே துன்பத்தை உருவாக்கும் கேணி? நண்பர்களின் வீடுகள் உறவுக் கூட்டத்தால் நிறைந்திருக்கும். தீபாவளி அன்று வயிறு காயும் போதெல்லாம் எனக்கு மலையாளக் கவி பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சிதம்பர நினைவுகள் ஞாபகம் வரும். பாலச்சந்திரன் இளைஞனாக இருக்கும் போது – அப்போதே அவர் பிரபலமான கவி – வீட்டிலிருந்து வெளியேறி பராரியாக … Read more

சினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு

சாரு நிவேதிதாவின் சினிமா ரசனை பயிற்சி பட்டறை – மூன்றாவது வகுப்பு 21-10-2018, ஞாயிறு காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை. பயிற்சிக்கட்டணம்: 500 ரூபாய் முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405. முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில் உள்ள டயட் இன் உணவக கட்டிடத்தின் இரண்டாவது மாடி. நண்பர்களே சாரு நிவேதிதா, … Read more

திசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்

திசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற இரண்டு புத்தகங்களும் முன் பதிவு செய்யப்படுகின்றன. இரண்டு புத்தகங்களின் மொத்த விலை 550 ரூ. இப்போது முன்பதிவில் இரண்டு புத்தகங்களும் சேர்த்து 375 ரூபாய்க்குக் கிடைக்கிறது. தொடர்புக்கு : https://tinyurl.com/budle-nadodi-thisai திசை அறியும் பறவைகள் மட்டும் தேவையென்றாலும் முன்பதிவு செய்யலாம். 350 ரூ. விலை உள்ள இந்தப் புத்தகம் முன்பதிவு செய்தால் 250 ரூபாய்க்குக் கிடைக்கும். தொடர்புக்கு: https://tinyurl.com/thisaiariyumparavai நாடோடியின் நாட்குறிப்புகள் நூல் மட்டும் தனியாக வேண்டுமென்றாலும் … Read more