தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 1

அத்தாகாமா பாலைவனம் வாஸ்தவத்தில் இந்த அத்தியாயத்துக்கு 17-ஆம் எண் கொடுத்திருக்க வேண்டும்.  ஏனென்றால், இதுவரை தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகளாக 16 அத்தியாயம் எழுதியிருக்கிறேன்.  சில அத்தியாயங்களில் புகைப்படங்கள் மட்டுமே இருக்கும்.  ஆனாலும் இதை நாம் இந்தப் பயணத் தொடரின் எண் 1-ஆகவும் இதுவரை எழுதியவற்றை இத்தொடரின் முன்னுரையாகவும் கொள்வோம்.  தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் என்பது கூட இப்போதைக்கு ஒரு தற்காலிகத் தலைப்புதான்.  வேறு நல்ல தலைப்பு நீங்கள் சொன்னால் அதற்கு மாற்றிக் கொள்வோம்.  பனியும் நெருப்பும் என்று … Read more

அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (4)

என்னுடைய உள்வட்ட நண்பர்களாக இருப்பதற்கான முதல் தகுதி நான் விமர்சனம் செய்தால் அதை சகித்துக் கொள்ளும் மனத்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.  ஒரே ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு.  அவரை நான் விமர்சிப்பதில்லை.  தப்பித் தவறி விமர்சித்து விட்டால் நூறாயிரம் முறை மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது.  அதற்குப் பயந்து கொண்டே வாயை மூடிக் கொண்டு இருந்து விடுகிறேன்.  ஓ மை காட், இதையே கூட அவர் தன் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடுமே?  ம்ம்ம்… பரவாயில்லை.  யார் … Read more

அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (3)

சென்ற இரண்டு கட்டுரைகளையும் சற்றே கடும் தொனியில் எழுதியிருந்தேன்.  காரணத்தை அந்தக் கட்டுரைகளிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  ஒரே ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன்.  இந்தப் பண விஷயத்தை என் நெருங்கிய நண்பர்கள் தங்களுக்காகவும் என்று எடுத்துக் கொள்வது தவறு.  அஸ்வினி குமாரை நான் பார்த்ததில்லை.  15 ஆண்டு நண்பர்.  ஆல்ஃப்ரட் தியாகராஜனும் அப்படித்தான்.  20 ஆண்டுகளாகத் தெரியும்.  சமீபத்திய நண்பர் வித்யா சுபாஷ்.  அவர் என் மொழிபெயர்ப்பாளர்.  மொழிபெயர்ப்புக்கு எத்தனை மணி நேரம் செலவாகும்… … Read more

அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (2)

நீங்கள் படித்திருக்கலாம். அல்லது பலரும் படிக்காமலும் விட்டிருக்கலாம். என்னுடைய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் என்ற தலைப்பில் வெளிவந்த குமுதம் தொடர். இது ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் இரண்டு தொகுதிகளாக புத்தகமாகவும் வந்திருக்கிறது. என்னுடைய மிக முக்கியமான புத்தகம் இது. இதற்காக நான் மிகக் கடுமையாக உழைத்தேன். இரண்டு ஆண்டுகள் ஒரு வாரம் கூட இடைவெளி விடாமல் எழுதினேன். குமுதத்திலும் படு சுதந்திரம் கொடுத்தார்கள். சில சமயங்களில் குமுதத்தின் கருத்துக்கு நேர் எதிரான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளையும் … Read more

அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள்

வரும் அக்டோபரில் அமெரிக்கா (யு.எஸ்.) வரலாம் என்று இருக்கிறேன். வீஸா கிடைத்தால். இந்த முறை வீஸா கிடைக்க எஸ்.ஓ.டி.சி. மூலம் பயண ஏற்பாட்டைச் செய்து கொள்ளப் போகிறேன்.  ஐந்து நாள் எஸ்.ஓ.டி.சி. மூலம் ஊர் சுற்றல்.  ரெண்டு வாரம் நண்பர்களின் மூலம். முதல் வருகை அட்லாண்டா நகரம். ஏனென்றால், அங்கே வசிக்கும் ஒரு நண்பர்தான் பயண டிக்கட்டுக்கான பொறுப்பை ஏற்கிறார்.  அமெரிக்கா வாருங்கள் வாருங்கள் என்று சுமார் 20 நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகத் தீவிரமாக வற்புறுத்தி … Read more

Two Old Men

Dear Charu, இப்பதான் “எலிம் எலிஷா” கதை படித்தேன். உடனே உங்ககிட்ட பேசனும்னு தோனுச்சி இவ்ளோ நாள் நான் குழப்பமாக நினைத்திருந்த பல விஷயங்கள் தெளிவடைந்தது. உங்களுக்கு ஆயிரம் நன்றிகள். இந்த நொடி நீங்க எங்க இருந்தாலும் என் சார்பாக யாரோ ஒருவர் உங்களுக்கு முத்தமிட ட்டும். பிரியமுடன் மூர்த்தி.