அன்புள்ள ஜெயமோகனுக்கு…

அன்புள்ள ஜெயமோகனுக்கு, நான் உங்களை என் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா எழுத்தாளர்களையும்தான். அதிலும் உங்களை ரொம்ப விசேஷமாக. ஏன் என்று உங்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதியிருப்பவற்றையும் பேசியிருப்பவற்றையும் நீங்கள் நினைவுகூரலாம். குறிப்பாக, ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய விஷயத்தை ஒற்றை ஆளாகச் செய்து கொண்டிருக்கிறார் ஜெயமோகன் என்று எழுதியும் பேசியும் வருபவன். இன்னும் ஏராளமாக. நான் கலந்து கொள்ளும் சர்வதேசக் கருத்தரங்குகளிலும் உங்களையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் பற்றிக் குறிப்பிடாமல் பேசியதே இல்லை. நான் பத்தி எழுதும் … Read more

அர்ப்பணிப்பாண எழுத்து – சாருவின் சிறுகதைகள் குறித்து கணேசகுமாரன்

நன்றி: காமதேனு, 10.02.20 40 வருடங்களுக்கும் மேலாக கதை உலகில் இயங்கும் சாரு நிவேதிதாவின் சிறுகதைக்கான ஆதிக்கத்தை நினைவூட்டும் விதமாக ந. முருகேச பாண்டியன் தொகுத்திருக்கும் இச்சிறிய படைப்புக்கு மென்மை வரவேற்பும் வாழ்த்துகளும். சாரு  என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ஸீரோ டிகிரி, எக்ஸைல் என்று நாவல் வரிசைகளும் கட்டுரைகளும் இருக்க இனிமேல் ‘முள்’ சிறுகதையும் வாசகரின் நினைவுக்கு வருவது இத்தொகுப்பின் வெற்றி எனலாம். எழுத வந்த புதிதில் சாரு சிறுகதைகளில் முயன்றிருக்கும் துணிச்சல் செயல்பாடுகளை எண்ணும்போது … Read more

நிராகரிப்பும் தடையும்: அ. ராமசாமியின் எதிர்வினையை முன்வைத்து…

சாரு நிவேதிதாவின் பனுவல்கள் வளர்ச்சியடைந்த நடுத்தரவர்க்க மனநிலையோடு உரையாடல் செய்யும் பனுவல்கள். பெருமாள் முருகனின் பனுவல்கள் நடுத்தரவர்க்க மனநிலையே இன்னதென்றறியாத மனிதர்களின் உளப்பாங்கை நோக்கிப் பேசும் பனுவல்கள். இவ்விரண்டையும் இணையாக வைத்து விவாதிக்கும் புள்ளியைப் பனுவல்களுக்குள் கண்டறிவது இயலாத ஒன்று. அப்படிப் பேசும் ஒரு கட்டுரையை முக்கியமான கட்டுரை என்று சாருநிவேதிதாவே முன்வைத்துப் பேச முன்வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாரு நிவேதிதாவின் பனுவல்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் விவாதிக்கப்படாமல் போனதற்கும் அவரது புத்தகங்கள் சந்தைப்படுத்தப்பட்ட முறைகளும், விமர்சனங்களின் மீது அவர் … Read more

தமிழ் இந்து – மனுஷ்ய புத்திரன் – அடியேன்

என் எழுத்து பற்றிய த. ராஜனின் கட்டுரை ஒன்று தமிழ் இந்து நாளிதழில் இன்று வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  (இணைப்பு: https://www.hindutamil.in/news/literature/539842-charu-vs-perumal-murugan-3.html) அது மிக நல்ல ஒரு கட்டுரை.  தமிழ்ச் சமூகத்திலிருந்து அந்நியமாகி விட்ட ஒருவனை அந்த சமூகம் எப்படி எதிர்க்கும் அல்லது எதிர்கொள்ளும்?  எனவே சாருவின் மீதான இந்தப் புறக்கணிப்பு புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்பது ராஜன் கட்டுரையின் அடிச்சரடு.  அக்கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு.  சொல்லப்போனால், பத்திரிகையாளர்கள் இத்தனை உன்னிப்பாக ஒரு எழுத்தாளனை … Read more

ஸீரோ டிகிரி – மாத இதழ்

சாரு நிவேதிதா வாசகர் வட்ட நண்பர்கள் ஸீரோ டிகிரி என்ற பெயரில் ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.  ஏப்ரல் மாதம் முதல் இதழ் வெளிவரும்.  புதிய எழுத்தாளர்களுக்கும் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.  திரும்பவும் சொல்கிறேன்.  ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கும் இப்போது ஆரம்பிக்கப்பட இருக்கும் ஸீரோ டிகிரி பத்திரிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  மாதாமாதம் நான் அதில் எழுதுவேன்.  உயிர்மையில் நான் முதல் இதழிலிருந்து பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாதம் கூட … Read more

வியாசரின் கொடி மரபு – செல்வேந்திரன்

செல்வேந்திரன் முகநூலில் எழுதிய பதிவை கீழே தருகிறேன். அருட்செல்வ பேரரசனின் மகாபாரதம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மகாபாரத மொழிபெயர்ப்பு என்ற மகத்தான பணியைச் செய்து முடித்த அரசனுக்கு என் வாழ்த்துக்கள். வியாசரின் கொடி மரபு –செல்வேந்திரன் அருட்செல்வபேரரசனுக்குப் பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக திட்டமிட நண்பர்கள் அவ்வப்போது கூடினோம். ஒவ்வொருமுறையும் டைனமிக் நடராஜன் பேரரசனின் இம்முயற்சி எத்தகையது, இந்நிகழ்ச்சி எதற்காக என்பதை ஒருவர் ‘தெளிவாகப்’ பேசி நிகழ்வைத் துவக்க வேண்டும் என வலியுறுத்திக்கொண்டே இருந்தார். வாழ்த்துரைப்பவர்கள் எப்படியும் … Read more