ஓப்பன் பண்ணா… பற்றி அராத்து

அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டியில் நம்பிள் ஓப்பன் பண்ணா நாவல் முதல் பரிசு பெற்றிருக்கிறது. முதல் 5 இடங்களுக்குள் வருவது முதல் மற்றும் பெரும் சவால். ஏனென்றால் அமேசான் அல்காரிதம் நமக்குத் தெரியாது. இப்போது கூட பாருங்கள் ஒரு நாவல் 15 ரிவ்யூக்கள் மட்டுமே பெற்று முதல் 5 இடங்களுக்குள் வந்திருக்கிறது. வழக்கமான பழக்கமான என் வாசகர்களைத் தாண்டி பொது வாசகர்களையும் ஈர்க்கும்படி இருக்க வேண்டும் என்பது சவால். ஆனால் நான் அப்படி ஏதும் மெனக்கெடவில்லை. … Read more

கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்

https://www.amazon.in/pen-to-publish-contest/b?ie=UTF8&node=13819037031 கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் 5 லட்சம் ரூபாய் முதல் பரிசு பெற்ற நாவல் ஓப்பன் பண்ணா. எழுதியவர் அராத்து. ஒரு மனிதனின் உளவியல் சிக்கலை இந்த அளவு நுணுக்கமாக அணுகிய ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் நான் கண்டதில்லை. அது மட்டும் அல்லாமல் புகழின் வெளிச்சத்துக்கு உள்ளே ஒரு மனிதன் எந்த அளவு அந்தகாரத்தில் வாழ்கிறான் என்பதற்கான ஒரு நேரடி ஆவணம் ஓப்பன் பண்ணா. தமிழில் எனக்கு இப்படி ஒரு நாவல் … Read more

கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்…

அன்புள்ள சாரு sirவணக்கம். நீங்கள் எழுதிய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் என்ற நூலை சென்ற வாரம் முழுக்கப் படித்தேன். வேண்டுமென்றே தான் மெதுவாக படித்தேன். அற்புதமான அனுபவம். . உங்களுடன் நேரில் சந்தித்துப் பேசியது போல எளிமையான சுவாரஸ்யமான எழுத்து. படித்த ஒவ்வொரு பகுதியும் ஒரு தகவல் சுரங்கம்.  It was quite an experience Charu sir. There were instances I could relate to so much. I did smile, … Read more

தொலைந்து போன புத்தகம்…

அப்போது இலக்கியம் ஒரு கண், குடி இன்னொரு கண்.  அப்படி ஒரு குடி.  ஆனால் குடியைக் குடிக்காகக் குடிப்பதில்லை.  அதுவும் ஒரு தோது.  தி.ஜானகிராமனும் கு.ப.ரா.வும் வெற்றிலை பாக்கும் புகையிலுமாக இரவு பூராவும் இலக்கியம் பேசுவார்களாம்.  ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு அய்ட்டம்.  அப்போது வெற்றிலை பாக்கு புகையிலை.  இப்போது குடி.  பாரிஸிலிருந்து வாசன் வந்திருந்தான்.  நெருங்கிய நண்பன்.  சென்னை வந்தால் சின்மயா நகரில் ராமானுஜம் வீட்டில்தான் தங்குவான்.  இங்கே ராமானுஜத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.  பெயருக்கேற்ற புத்திசாலி.  … Read more

பூஜா ஹெக்டே

வணக்கம் சாரு.. ரொம்ப நாளைக்கு அப்புறம் இடுப்புக்குத் திரும்பி வந்துருக்கீங்க. வாழ்த்துக்கள். மட்டற்ற மகிழ்ச்சி.. கொஞ்சம் சைடு விட்டீர்கள் என்றால் அந்த குன்றில் நானும் ஏறி உங்கள் குரலுக்கு வலு சேர்ப்பேன். ஜெய் பூஜா ஹெக்டே!! நாள் மஜாவா ஆரம்பிச்சிருக்கு. உங்க ரசிகனா இருந்தா மட்டும் தான் கீழ வர பாட்டெல்லாம் யூடூப்பில் பரிந்துரையா வரும். https://en.wikipedia.org/wiki/WAP_(song) எமினெம் எல்லாம் தூர ஓடணும். Cardi B ரகள பண்ணிருக்கு. Exile ஒரு நாலு பக்கம் படிச்சா மாறி … Read more