8. டென் டௌனிங்கில் ஒரு சந்திப்பு (சிறுகதை)

இளைய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் மூத்த எழுத்தாளர்கள் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டுமா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.   உதாரணமாக, வண்ணநிலவன் ஆயிரம் ரூபாய் கொடுத்து என்னுடைய எக்ஸைல் நாவலை வாங்கினால் அதை எனக்குச் சேரும் பாவம் என்றே கருதுவேன்.  (அம்மாதிரி அதிபயங்கர விபத்தெல்லாம் நடந்து விடாது, சும்மா ஒரு கற்பனை!) வண்ணநிலவன் போன்ற ஒரு லெஜண்டரி எழுத்தாளர் என் புத்தகத்தை ஆயிரம் ரூபாய் கொடுத்து  வாங்குவதா?  அதே மாதிரிதான் அசோகமித்திரன் என்னுடைய புத்தகத்தைக் காசு போட்டு … Read more

திருவாரூரில் ஒரு சின்ன வேலை

பொறாமை பற்றி சமீபத்தில் ஒரு கதை எழுதினேன் இல்லையா, ஜக்கியை வைத்து.  அது கதை என்பதால் ஒரு திசையில் போய் விட்டது.  எதார்த்தம் என்னவென்றால், எனக்கு ஜெயமோகனின் வாசகர்கள் மீதுதான் பொறாமை.  ஏன் என்று இதைப் படித்து முடித்தால் உங்களுக்குப் புரியும்.  ஒரு நண்பர்.  ரொம்ப இளைஞர்.  வாசகர் வட்டத்தின் உள் வளையத்தைச் சேர்ந்தவர்.  சொந்த ஊர் திருவாரூர்.  திருவாரூரில்தான் வசிக்கிறார்.  தினந்தோறும் எனக்கு ஏதாவது இசை பற்றிய லிங்குகளை வாட்ஸப்பில் அனுப்புவார்.  95 சதம் எனக்கு … Read more

7. பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த ஒரு குட்டி உரையாடல்

நித்திரை வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் பரமசிவன்.  அவர் இப்படிப் புரண்டதில் விழித்துக் கொண்ட பார்வதி “என்ன ஷிவ், நித்திரை வர்லியா, ஏதாவது வாய்வுப் பிரச்சினையா?  அதனால்தான் ராத்திரியில் சக்கரைப் பொங்கலையும் வெண்பொங்கலையும் வச்சு வச்சு அடிக்காதீங்கன்னு அடிச்சுக்கறேன்.  நீங்க என் பேச்சைக் கேக்கறதே இல்லை.  ரொம்ப சொன்னா எதாவது சாபத்தைக் கொடுத்து மாடா போ ஆடா போன்னு அனுப்பி வைச்சிடுவீங்க.  அப்புறம் என்னைக் காப்பாற்ற எங்க அண்ணாதான் கோகுல கிருஷ்ணனா வரணும்…” “ஏய் பார்வி… … Read more

6. சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் நடந்த ஒரு குட்டி உரையாடல்

அத்தியாயம்: ஒன்று. இடம்: பூலோகம் கொரோனா வந்ததிலிருந்து எனக்குக் காப்பித் தூள் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தது புவனேஸ்வரி.  சென்ற மாதம் ஆன்லைன் ஷாப்பிங்கில் காப்பித் தூள் நின்று விட்டது.   எனக்கோ வெளியே போக அனுமதி கிடையாது.  மேனேஜர்தான் எத்தனை வேலையைச் செய்வார்?  அவரையும் அனுப்ப இயலாது.  என்னோலோ வைன் குடிக்காமல் வாணாள் முழுவதும் கூட இருக்க முடியும்.  காப்பி இல்லாமல் முடியாது.   ராமிடம் சொன்னேன்.  போன மாதம் விமல் காப்பி 80 – 20 வாங்கிக் கொண்டு … Read more

5. ஒரு சீரியஸ் இலக்கியக் கதை போல் தோற்றமளிக்கும் செக்ஸ் கதை (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)

அந்தத் தீவின் பெயர் யாவ் நாய் (Yao Noi).  பாங்காக்கிலிருந்து தெற்கே 660 கி.மீ. தூரம் சென்றால் அந்தமான் கடலில் உள்ள ஒரு குட்டியூண்டு தீவு.  இதற்கு மேல் தீவு பற்றிய விவரம் வேண்டாம். கொடுத்தால் இது பயணக் கட்டுரை ஆகி விடும்.  ஆனால் இதுவோ குட்டிக் கதை. (இரட்டை அர்த்தத்திலும் படித்துக் கொள்ளலாம்.)  ஒரு இலக்கியக் கருத்தரங்குக்காக சிங்கப்பூர் செல்ல இருந்தது எனக்கு.  அப்படியே ஒரு எட்டு வேறு ஏதாவது ஊருக்கும் போய் வரலாம், நீயும் … Read more