எக்ஸைல்

Autofiction என்ற இலக்கிய வகையில் உலக அளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள்.  இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு.  நடையும் விவரணங்களும் baroque பாணியில் அமைந்திருக்கின்றன.  ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டிடக் கலை.  உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகே பிந்து நதியின் கரையிலிருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகையைச் சொல்லலாம்.  இந்த நாவலின் கட்டமைப்பும் விவரணங்களும் பிரம்மாண்டமும் … Read more

க்ளப் ஹவுஸ் சந்திப்பு

நேற்று நடந்த க்ளப்ஹவ்ஸ் சந்திப்பு பிரமாதமாக இருந்தது.  ஆறரைக்குத் தொடங்கி ஒன்பதரைக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்.  இன்னும் மூன்று மணி நேரம் கூடப் போயிருக்கும்.  இனிமேல், மாதம் ஒருமுறை இப்படி வாசகர்களையும் நண்பர்களையும் சந்திக்கலாம் என்று இருக்கிறேன்.  அடுத்த சந்திப்பு குறித்த நாள் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.  மொத்தம் 370 பேர் கலந்து கொண்டார்கள்.  ஒரு கட்டத்தில் அது 320 ஆனது.  அதற்குக் கீழே குறையவில்லை.  கேரளத்தில் டி.சி. புக்ஸ் சந்திப்பில் 1000 பேர் கலந்து கொள்கிறார்கள்.  … Read more

இன்று க்ளப்ஹவுஸ் சந்திப்பு

இன்று மாலை ஆறு மணி என்று குறிப்பிட்டிருந்தேன். தவறு. இன்று மாலை ஆறரை மணி. இந்திய நேரம். 16.6.2021. புதன்கிழமை. குறிப்பிட்டு எந்தப் பொருளும் இல்லை. நீங்கள் கேள்விகள் கேட்கலாம். ஒரு உரையாடலாகவே இருக்கும். https://www.clubhouse.com/event/mWrbvAJ8 இப்போது அதிகம் நம் ப்ளாகில் எழுதுவதில்லை என்று நினைத்திருப்பீர்கள். bynge.in இல் வாரம் இரண்டு அத்தியாயம் வருகிறது. அ-காலம். நீங்கள் படிக்க வேண்டும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் பிஞ்ஜ் டாட் இன் – ஐ டவுன்லோட் செய்து அ-காலம் படிக்கலாம். … Read more

க்ளப்ஹவுஸில் சந்திப்போம்

https://www.clubhouse.com/event/mWrbvAJ8 புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு க்ளப்ஹவுஸில் வாசகர் கேள்விக்கு பதில் அளிக்கிறேன். ஒருங்கிணைப்பாளர்கள்: காயத்ரி, அராத்து.நண்பர்கள் மது அருந்தி விட்டு வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சந்திப்பு முடிந்ததும் அருந்திக் கொள்ளுங்கள்.