புத்தக விழாவுக்கு வருகிறேன்…

இன்று காலை பதினோரு மணிக்கு என் வீட்டுக்கு எதிரே உள்ள (அப்பு இரண்டாவது தெரு) ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஃபீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். போட்டதிலிருந்து ரெண்டு பெக் ரெமி மார்ட்டின் போட்டது போல் இருக்கிறது. போட்டது வந்தது எல்லாம் கதை போல் நடந்தது என்பதால் குமுதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன். தடுப்பூசி போட்டு விட்டதால் என் கண்காணிப்பாளர் எனக்கு புத்தக விழா செல்ல அனுமதி அளித்து விட்டார். சனிக்கிழமை மாலை நாலு மணிக்கு ஸீரோ டிகிரி … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு – சில எதிர்வினைகள்

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்கு வரும் எதிர்வினைகளைத் தொகுத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன். நேற்றும் இன்றும் ஒவ்வொரு கடிதம். முதல் கடிதம்: அன்புள்ள சாரு,  முகமூடிகள் 85வது பக்கத்தில் படித்தது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆசான் அலியிடம் கேலியாகக் கூறும் செய்தி : “நீ நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய், அதுதான் உன் தோல்வி. நீ நேசிக்கப்பட வேண்டும் என்று ஏங்கினால் நீ யாராக இருக்கிறாயோ அதிலிருந்து நீ விலகிச் செல்கிறாய். மற்றவர்கள் நீ … Read more

ஒரு கடிதமும் பதிலும்…

அன்பான சாரு, தாங்கள் சொல்வது சரி. நாம் மலேசியாவிலும் தமிழகத்திலும் சந்தித்துள்ளோம். மலேசியா போலவே தமிழகத்திலும் உரையாடியுள்ளோம். அப்படி உங்கள் வாசிப்பு, இலக்கியம் குறித்த பார்வையை அறிந்தவன் நான். அதைவிட விரிவாக எழுத்தில். உங்களின் ஊரின் மிக அழகான பெண் குறித்து எழுதியும் பேசியும் இருக்கிறேன். ஒருவகையில் தாங்கள் மேற்கோள் காட்டிய நூல்களையும் சினிமாவையும் தேடி வாசித்துள்ளேன், பார்த்துள்ளேன். உங்கள் வழி நான் பெற்றவை அதிகம். எனவே என் மனப்பதிவில் தாங்கள் உலக இலக்கியம் அறிந்தவர்.  நீங்கள் … Read more

காலணா வெற்றிலையும் ஒரு கப் காஃபியும்… (2)

ஒரு வாசகர் கடிதம்.  அதில் இரண்டு கேள்விகள்.  ஒன்று, துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.  ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?  இரண்டு, இப்படி பகிரங்கப்படுத்தி உங்கள் நண்பரைப் புண்படுத்துவதை விட அவரிடம் நேரில்தான் சொல்லியிருக்க வேண்டும். உங்களிடம் வயதுக்குத் தகுந்த முதிர்ச்சி இல்லை. என் கட்டுரையை இந்த அன்பர் புரிந்து கொள்ளவில்லை.  கையெழுத்து வாங்க வந்த வாசக அன்பரிடம் நான் துறவி என்று சொல்லிக் கொள்ளவில்லை.  அவர் ஐந்து நிமிடம் பேசினார்.  அதில் நான்கு நிமிடம் தனக்கு திருப்பூரில் உள்ள … Read more

காலணா வெற்றிலையும் ஒரு கப் காஃபியும்…

நாம் நம்முடைய நுண்ணுணர்விலும் சுரணையுணர்விலும் ரொம்பவும் மழுங்கிப் போயிருக்கிறோம் என்று தோன்றுகிறது.   நானும் தொடர்ந்து பண விஷயத்தைப் பற்றி அலுக்கவே அலுக்காமல் எழுதிக் குவிக்கிறேன். ஆனால் பணத்தை ஏன் மனிதர்கள் தெய்வமாய்த் தொழுது கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது.   அமெரிக்கர்கள் பணத்தை மிக முக்கியமாகக் கருதுகிறார்கள். நண்பர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதில் கூட கணக்குப் பார்க்கிறார்கள்.  அவ்வளவு ஏன், காதலிக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதில் கூட கணக்கு.  சமீபத்தில் Meital Dohan தன் … Read more

ஸ்ரீமிட்டாய் ஜாங்கிரியும் கருப்பட்டி ஹல்வாவும்…

அவர் ஒரு பெண் பதிப்பாளர்.  பார்க்கவும் சுமாராக இருப்பார்.  என் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார்.  அதனால் புத்தக விழாவில் எனக்குத் தேவையான புத்தகங்கள் சிலவற்றை ஒரு நண்பர் வாங்கிக் கொடுக்க அதை என்னிடம் இன்னொரு நண்பர் மூலம் அனுப்பி வைத்தார்.  பெயர்களைக் குறிப்பிட்டால் வம்பு வந்து சேர்வதால் யாருக்கும் புரியாத மாதிரி கிசுகிசு பாணியில் எழுதி விட்டேன்.  யார் என்று தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொள்ளுங்கள்.  கொடுத்து அனுப்பிய புத்தக பார்சல்களைப் பார்த்து விட்டு மகிழ்ச்சிக்கு … Read more