புத்தக விழா

வருகின்ற புத்தக விழாவில் என்னுடைய புதிய புத்தகங்கள் எதுவும் வருகிறதா என நண்பர்கள் அக்கறையோடு விசாரித்தனர். நான் நாவல் எழுதும் மும்முரத்தில் அல்லவா இருக்கிறேன் என்றேன். எப்படியோ மனதைக் கரைத்து விட்டார்கள். அதனால் சட்டென்று அந்த வேலையில் அமர்ந்து இரண்டு புத்தகங்களை அனுப்பி விட்டேன். இன்னும் இரண்டு புத்தகங்களை அனுப்புவேன். மயானக் கொள்ளை (நாடகம்) மாயமோகினி (கவிதைத் தொகுப்பு) சொல் தீண்டிப் பழகு (கட்டுரைத் தொகுப்பு) பூச்சி (சுயசரிதக் குறிப்புகள்) இது தவிர இன்னும் மூன்று அத்தியாயங்கள் … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு – 2

அன்புள்ள சாருஎனக்கு தருண் மீதும் சாருவின் மொழிபெயர்ப்பு மீதும் நம்பிக்கையுண்டு. உங்களின் இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.ஆனால் தயவுசெய்து தலைப்பு பற்றி கொஞ்சம் மறு பரிசீலனை செய்யுங்கள். இது ஒரு மாயாவிக் கதையின் தலைப்பு போல இருக்கிறது. ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். மேலும் இந்தக் கதையில் நீங்கள் ஊறியிருப்பீர்கள். அதனால் வித்தியாசமான மற்றும் ஆங்கிலத் தலைப்புடன் ஒத்துப் போகக்கூடிய ஒன்று நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். மெதூஸாவின் மதுக்கோப்பை … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

தருண் தேஜ்பால் எழுதிய Valley of Masks என்ற அதியற்புதமான நாவல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்ற தலைப்பில் தமிழ் மொழிபெயர்ப்பில் அநேகமாக இன்னும் ஒரு மாத காலத்தில் உங்கள் கைகளில் கிடைக்கும். அதன் இறுதி கட்ட fine tuning வேலையில் இருக்கிறேன். 2020-ஆம் ஆண்டின் பெரும்பகுதி இந்த மொழிபெயர்ப்பு வேலைகளிலேயே போய் விட்டது. சந்தர்ப்பவசமாகவே இந்தப் பணியில் நான் கலந்து கொள்ள நேர்ந்தது. ஆனால் இறங்கிய பிறகு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பது என் மதம். அதனால் … Read more

கலையும் கடவுளும்…

ஒரு பெரிய விவாதத்துக்கு உரிய விஷயத்தை என் நண்பர் கேஷவ் தட்டி விட்டார் முகநூலில். கிருஷ்ணாவின் பழைய கச்சேரி ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். அதில் அவர் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது ஒரு சூப்பர் டூப்பர் இடதுசாரி என்றும், ஆனாலும் அவர் இசை என் நெஞ்சைத் தொடுகிறது என்றும் எழுதியிருந்தார் கேஷவ். தொடட்டும். அது எனக்குப் பிரச்சினை இல்லை. சங்கராபரணம் என்ற படத்தில் வரும் பாடல்களைக் கேட்டு வடக்கே ஓடியவன் நான், இப்போதுதான் தெற்கே திரும்பியிருக்கிறேன். ஆள் … Read more

D. அண்ணாஸ்வாமி பாகவதர்

எம்பார் விஜயராகவாச்சாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகிய இருவருக்கும் மூத்தவர் திருவையாறு அண்ணாஸ்வாமி பாகவதர். இவரது ராமாயண காலக்ஷேபம் பிரசித்தி பெற்றது. இவர் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னை மியூசிக் அகாதமியில் தியாகராஜரின் வாழ்க்கை பற்றி ஒரு காலக்ஷேபம் பண்ணினார். அது நிச்சயம் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் எனக்கு இணையத்தில் கிடைக்கவில்லை. அவரது ராமாயணம் கிடைக்கிறது. தியாகராஜர் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் விவரம் தெரிவியுங்கள். charu.nivedita.india@gmail.com