அளவுகோல்கள்

அன்புள்ள சாரு அவ‌ர்க‌ளுக்கு, உங்கள் இலக்கிய அளவுகோல்கள் மற்றும் சினிமா அளவுகோல்கள் என்னவாக இருக்கும் என்று அவ்வப்போது நான் யோசிப்பதுண்டு. நீங்கள் சில படைப்புகளை குப்பை என்றும் சில படைப்புகளை அற்புதம் என்றும் சிலாகிப்பீர்கள். எப்படி சில படைப்புகளை குப்பை என்றும் அற்புதம் என்றும் மதிப்பிடுகிறீர்கள். சொன்னால் நன்றாக இருக்கும்.  இப்படிக்கு உங்கள் வாசகன்,  தினேஷ்  அன்புள்ள தினேஷ், நேற்று காலையிலிருந்து தியாகராஜாவுக்காகப் பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டு எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்த நிலையில் உங்கள் இந்தக் கடிதம் … Read more

இவளே, என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

இப்போலாம் என்ன பாராவோட ரொம்ப க்ளோஸ் போல இருக்கு? இந்த கொரோனா காலத்துல என்ன க்ளோஸ்?  கொரோனாவே எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிக்கிட்டு இருக்கு, நீங்க வேறே… இல்ல.  கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன்.  பழக வேணாம்னு சொல்லல.  அவரும் நல்ல மாதிரிதான்.  ஆனா உங்களோட ராசி என்னன்னா நீங்க யாரோட க்ளோஸா ஆனாலும் அவங்க பிறகு உங்களுக்கு எதிரியா மாறிட்றாங்க.  பாருங்க, நீங்கதானே சொன்னீங்க, வெளி ரங்கராஜன் தன் வாழ்நாளிலேயே திட்டி எழுதின ஆள் நீங்கதான்னு… அதனால சொல்றேன்.  சேச்சே. … Read more

ஜோஜி – ஃபஹத் ஃபாஸில்

நான் இன்னும் பார்க்கவில்லை சாரு. பகத் பாசில் நடிப்பைப் பார்த்துவிட்டு ஓவர் ஆக்டிங் செய்யும் நம் ஆட்களை சும்மா ஜாலியாக கிண்டல் செய்யும் பதிவு இது. அந்த ஊர் மண்ணின் ஸ்டைல் இது சாரு. மம்முட்டி மோகன்லால் என அனைவரும் சும்மா வந்துவிட்டு தான் போவார்கள். ஜோசப் என்ற படத்தில் நடித்த ஹீரோ கூட முதல் பட ஹீரோ என்பதே தெரியாமல் அசத்தியிருப்பார். நெடுமுடி வேணு கூட மிக இயல்பாக எல்லா படங்களிலும் நடிப்பார். Sex படம் … Read more

மதுவுக்கு இருந்த அவப்பெயரை நீக்கிய கதை…

பொதுவாக காதலில் ஆண்தான் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று பெண்ணிடம் கேட்பார்கள்.  உலக வழக்கமே அதுதான்.  ஆனால் என் விஷயத்தில் அது உல்ட்டாவாக நடந்தது.  அவந்திகாதான் கேட்டாள்.  நான் சொன்னேன், ”வேண்டாம், ஏனென்றால் நான் தண்ணி அடிப்பேன், நீயோ தண்ணி அடிப்பது பஞ்சமா பாவம் என்று நினைப்பவள்;  ஒத்து வராது.  மேலும், நான் எக்காரணம் கொண்டும் தண்ணி அடிப்பதை எக்காலத்திலும் நிறுத்துவதாகவும் இல்லை” என்றேன்.  எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை.  அவளும் அதெல்லாம் … Read more

ஜோஜி

காலையிலிருந்து பத்து மணி வரை எழுத்தும் படிப்புமாக இருக்கும் நிலையில் இடையில் ஏதேனும் ஒரு அரை மணி நேரம் சினிமாவுக்கோ இசைக்கோ ஒதுக்குவேன்.  நாவல் முடியும் வரை இரவு ராணுவ ஒழுங்குடன் பத்து மணிக்குப் படுக்கைக்குச் செல்வது நடக்காது.  பன்னிரண்டு கூட ஆகும்.  அந்தத் தருணத்தின் ஓட்டத்தை விட்டால் அது பிறகு கிடைப்பது கடினம்.  ஆனால் பன்னிரண்டுக்குப் படுத்தால் காலை என் வசம் இல்லை.  ஆறு மணிக்குத்தான் எழுந்து கொள்ள முடியும்.  ஆறு மணி நேர உறக்கம் … Read more