திருக்கல்யாணம் (தொடர்ச்சி)

ஒரு பிழை இருந்தது. என் குருநாதரைத் தவிர வேறு யாரும் குறிப்பிடவில்லை. ஹெச்சரிககா என்பதில் ரி-யை முழுங்கி விட்டேன். தட்டச்சுப் பிழை. ஆனால் இன்னொரு பிழை முக்கியமானது. குருநாதரோடு கூட வினித்தும் குறிப்பிட்டார். கே.வி.என். என் குருநாதர் கே.வி.என்.னின் சிஷ்யர் வேறு. கே.வி.என்.னை எப்படி மறந்தேன் எனத் தெரியவில்லை. அரியக்குடி, கே.வி.என். இருவருமே ஹெச்சரிககாவில் முழுமை.

10. இசை பற்றிய சில குறிப்புகள்: திருக்கல்யாணம்

காலையிலிருந்து சீதா – ராமனின் திருக்கல்யாண வைபவத்தை விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். வெறுமனே எழுத முடியாது.  தியாகராஜரின் உத்ஸவ ஸம்பிரதாயக் கீர்த்தனையான ஹெச்சரிககாவை பற்பல இசைக் கலைஞர்களும் பாடியிருப்பதைக் கேட்டேன்.  பாம்பே ஜெயஸ்ரீ, எம்.எஸ். மேலும் சிலரைக் கேட்டு சிறிதும் திருப்தி இல்லை.  அரியக்குடியைக் கேட்கும் போது மட்டுமே கீர்த்தனையிலும் சங்கீதத்திலும் மனம் லயித்தது.  வேறு யாரேனும் அரியக்குடியின் தரத்தில் பாடியிருந்தால் எனக்கு தயவுசெய்து தெரிவியுங்கள்.  (தம்பி வினித், சஞ்சய், டி.எம். கிருஷ்ணா என்று அனுப்பி வைத்து … Read more

10. நகைச்சுவை மறந்த சமூகம்

ஒரு கவர்ச்சி நடிகை உச்சத்தில் இருந்த சமயம்.  பொறுங்கள், எடுத்த எடுப்பில் அந்த நடிகையின் பெயரைத்தான் தட்டச்சு செய்தேன்.  ஆனால் இப்போதெல்லாம் எந்தப் பெயரைப் போட்டாலும் குண்டாந்தடி அடி விழுகிறது என்பதால் மீண்டும் ஆரம்ப இடத்துக்குப் போய் நடிகையின் பெயரை நீக்கி விட்டு, ஒரு கவர்ச்சி நடிகை என்று போட்டேன்.  அந்த அளவுக்கு ஆகியிருக்கிறது நிலைமை.  சரி, ஆரம்பிக்கிறேன்.  ஒரு கவர்ச்சி நடிகை உச்சத்தில் இருந்த சமயம்.  அவரைச் சந்திக்க நேர்ந்தது.  பேசிக் கொண்டிருந்து விட்டு அன்றைய … Read more

9. மீண்டும் ஒருவர்

என் நாவலைப் படித்துப் பார்த்து ரெண்டு வார்த்தை திட்டுங்கள் அப்பா என்று வரும் கடிதங்களையெல்லாம் குப்பையில் தள்ளி விட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்தான். ஆனால் எனக்கும் கேளிக்கை தேவைப்படுகிறது அல்லவா, அதனால் இப்படிப்பட்ட சிறு விலகல்கள்.  இன்று அப்படி வந்த ஒரு கடிதம் இது: ஒருமுறை உங்கள் பேட்டியைக் கேட்ட பிறகு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் படிக்க ஆரம்பித்தேன். அவர்களில் யோசா, போர்ஹேஸ், ரொபர்த்தோ பொலான்யோ ஆகியவர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள்.  உங்கள் வாழ்க்கையில் உங்களைக் கவர்ந்த … Read more

8. மறுமை நோக்கியதன்று, வறுமை நோக்கியது…

சில மாதங்களுக்கு முன்பு கோவிட் தொற்று உச்சத்தில் இருந்தபோது ஒரு அமெரிக்க வாழ் வாசக நண்பரிடமிருந்து ஒரு செய்தி வந்தது.  எங்கள் நகரத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில், வர இருக்கும் ஒரு தமிழ் விசேஷ நாளை ஒட்டி உரையாற்ற முடியுமா?  அவர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர்.  முடியும் என்றேன். இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர். சரி, மகிழ்ச்சி, அவர்களைக் கேட்டு அடுத்து தொடர்பு கொள்கிறேன் என்றார்.  சரி என்று சொல்லியிருப்பேன், அமெரிக்கத் தூதரகத்தில் இரண்டு … Read more

சி.சு. செல்லப்பா – சாரு நிவேதிதா உரை

சி.சு. செல்லப்பா பற்றிய என் உரை 31.5.2020 அன்று நடந்தது. காலை ஆறு மணி. இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடம் பேச்சு. நீங்கள் இதை முழுமையாக ஒரே மூச்சில் கேட்க முடியாமல் போனால் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கலாம். செல்லப்பாவின் எழுத்தில் ஒரு பதினைந்து ஆண்டு காலம் செலவிட்டிருக்கிறேன். இதை ஸூம் சந்திப்பின் மூலம் சாத்தியப்படுத்தினோம்.  உலகின் பல மூலைகளிலிருந்து வாசகர்கள் கேட்டனர்.  சதீஷ்வர் ஒருங்கிணைத்துக் கொடுத்தார். ஸூமின் பாஸ்வேர்ட் போன்ற விவரங்களைக் கொண்டுதான் கூட்டத்தில் கலந்து … Read more